4 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.. காற்று மாசு அதிகரித்ததால் உத்தரவு.!
4 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.. காற்று மாசு அதிகரித்ததால் உத்தரவு.!
காற்று மாசு அதிகரித்த காரணத்தால் ஹரியானா மாநிலத்தில் உள்ள 4 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
ஹரியானா, டெல்லி, உத்திர பிரதேசம் மாநிலங்களில் விவசாய கழிவுகளை தொடர்ந்து விவசாயிகள் எரித்து வருவதால், அதனால் ஏற்படும் காற்று மாசு இம்மாநிலங்களை பெருமளவு பாதித்து வருகிறது.
இந்நிலையில், தற்போது ஹரியானா மாநிலத்தில் காற்று மாசு அதிகரித்துள்ளது. இதனால் அம்மாநிலத்தில் உள்ள 4 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து, மாநில அரசு அறிவித்துள்ளது.
ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகிராம், சோனிபட், பரிதாபாத் மற்றும் ஜஜ்ஜார் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை இந்த உத்தரவுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனைப்போல, அனைத்துவிதமான கட்டுமான பணிகளுக்கும் தற்காலிக தடையினை விதித்து உத்தரவிட்டுள்ளது.