அக்காவையே எமனாக மாற்றிய பெற்றோரின் பாசம்... தம்பிக்கு அக்கா செய்த கொடூரம்.!
அக்காவே எமனாக மாற்றிய பெற்றோரின் பாசம்... தம்பிக்கு அக்கா செய்த கொடூரம்.!
தன்னை விட தனது தம்பியின் மீது அதிக பாசம் காட்டியதால் சொந்தத் தம்பியை அக்கா கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் நம் நாட்டின் சரியான மாநிலத்தில் தான் நடைபெற்று உள்ளது.
ஹரியானா மாநிலத்தைச் சார்ந்த ரஞ்சித் சர்மா என்பவருக்கு 15 வயதில் ஒரு பெண் குழந்தையும் 12 வயதில் ஒரு ஆண் குழந்தையும் இருந்தனர். இரண்டு குழந்தைகளும் தங்களது பாட்டி வீட்டில் வளர்ந்து வந்துள்ளனர். தற்போது கோடை விடுமுறை என்பதால் பெற்றோர் வீட்டிற்கு திரும்பி இருக்கின்றனர் குழந்தைகள்.
தனது பெற்றோர் தம்பி இடமே அதிக பாசம் காட்டுவதாக அந்த சிறுமிக்கு எண்ணம் தோன்றி கொண்டே இருந்திருக்கிறது. ஒரு நாள் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் அவர்களது செல்போனை எடுத்து தம்பி விளையாடிக் கொண்டிருந்திருக்கிறான். செல்போனை தன்னிடம் கொடுக்குமாறு அக்கா கேட்டிருக்கிறார். இதற்கு அந்த சிறுவன் மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அவனது அக்கா சிறுவனின் கழுத்தை நெரித்துள்ளார். இதில் அந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். பின்னர் அவர்களது பெற்றோர் வந்ததும் சிறுவனை தேடி இருக்கின்றனர். சிறுவன் போர்வைக்கு அடியில் படுத்து கிடந்தான். அவனைப் பெற்றோர் எழுப்ப முற்பட்டபோது அவன் உயிரிழந்த சம்பவம் அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக அந்த சிறுமியிடம் கேட்டபோது பெற்றோர்கள் தம்பியின் மீது அதிக பாசம் வைத்ததால் அவனை கொலை செய்ததாக தெரிவித்திருக்கிறார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் காவல்துறையிடம் இது குறித்து புகார் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை சிறுமியை கைது செய்து சிறுவர் சீர்திருத்த நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தது.