பருவமழையால் நாசம் அடைந்த மண்டி., முன்னாள் முதல்வர் ஆய்வு.!!
பருவமழையால் நாசம் அடைந்த மண்டி., முன்னாள் முதல்வர் ஆய்வு.!!
இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் சமீப நாட்களாக பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளைக்காடாக மாறி உள்ளது. இந்த பருவமழை காரணத்தால் இமாச்சலம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் மழையினால் பாலங்கள் முழுவதும் அடித்து செல்லப்பட்டுள்ளது.
ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் மழையில் இழுத்து செல்லப்பட்டன. மேலும் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் வெளியே வர முடியாமல் வீட்டிற்குள்ளே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கனமழை அச்சுறுத்தி வருவதால் மாநிலமே வெள்ளத்தால் தத்தளித்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், பாஜக தலைவரும், இமாச்சலப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான ஜெய்ராம் தாக்கூர், மாநிலத்தில் இடைவிடாது பெய்து வரும் மழையைத் தொடர்ந்து, திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் மாவட்டம் அழிந்துள்ள நிலையில், நிலைமையை ஆய்வு செய்ய இமாச்சல மாநிலத்தில் உள்ள மண்டிக்கு வருகை தந்தார்.