#BigNews: Hero Motocrop நிறுவன உரிமையாளர், அதிகாரிகள் வீடு, அலுவலகத்தில் வருமானவரித்துறை சோதனை..!
#BigNews: Hero Motocrop நிறுவன உரிமையாளர், அதிகாரிகள் வீடு, அலுவலகத்தில் வருமானவரித்துறை சோதனை..!
இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான Hero Motocrop நிறுவனத்தின் உரிமையாளர், அலுவலகம் உள்ளிட்ட பல இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
டெல்லி குருகிராம் பகுதியில் உள்ள அந்நிறுவனத்தின் உரிமையாளர் பவன் முஞ்சாலியின் வீடு, அலுவலகம், Hero Motocrop நிறுவனத்தை சேர்ந்த முக்கிய அதிகாரிகளின் வீடுகளில் சோதனை நடக்கிறது. டெல்லி, இந்தூர் அலுவலகத்திலும் சோதனைகள் நடைபெற்று வருகிறது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் வருமான வரிஏய்ப்பு செய்ததாக புகார்கள் எழுந்த நிலையில், அதனைத்தொடர்ந்து அதிகாரிகள் இன்று காலை முதலாக அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிறுவனம் ஆசியா, ஆப்ரிக்கா மற்றும் தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்கா போன்ற 40 நாடுகளில் வாகன விற்பனையில் முன்னணியில் இருந்து வரும் நிலையில், இந்த வருமான பரிசோதனை பேரதிர்வை ஏற்படுத்தியுள்ளது. ரெய்டைத் தொடர்ந்து அதன் பங்குகளும் வீழ்ச்சியடைந்துள்ளன.