பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு!! உயரப் போகும் கேஸ் சிலிண்டர் விலை... மத்திய அரசு அதிரடி முடிவு..!
பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு!! உயரப் போகும் கேஸ் சிலிண்டர் விலை... மத்திய அரசு அதிரடி முடிவு..!
சிலிண்டர் இணைப்பை வாங்கும் போது பணம் செலுத்தும் முறையை மத்திய அரசு மாற்றப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ,பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் ஆகிய மூன்று நிறுவனங்களும் சிலிண்டர்களை விநியோகம் செய்து வருகின்றனர். இனி இந்த நிறுவனங்களின் விநியோகிஸ்தர்களுக்கு தள்ளுபடி வசதி கிடையாது என்று அறிவித்துள்ளது.
எரிபொருள் வெளியேற்றத்தின் எதிரொளியாக இந்த சிலிண்டர்களின் விலையும் படிப்படியாக உயரத் தொடங்கியுள்ளது. அந்த வகையில் எல்பிஜி சிலிண்டருக்கான தள்ளுபடி ரத்து செய்துள்ளது. அதாவது இனிமேல் எல்பிஜி சிலிண்டர் இணைப்பை வாங்குவதற்கு கூடுதலாக பணம் செலவழிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
அரசு எண்ணெய் நிறுவனங்கள் வணிக கேஸ் சிலிண்டர்களுக்கு ரூபாய் 200 முதல் ரூபாய் 300 வரை தள்ளுபடி அளித்து வந்த விலையில் தற்போது இந்த சலுகையை ரத்து செய்யப்பட உள்ளது.
மேலும் வணிக சிலிண்டர்களுக்கு அதிக தள்ளுபடி அளிப்பதாக வினியோஸ்தர்களிடம் எழுந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த முக்கிய முடிவானது நவம்பர் 8 தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது