இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் இந்தியாவில் எகிறிய உச்சகட்ட கொரோனா பாதிப்பு..! 24 மணி நேரத்தில் எவ்வளவு தெரியுமா..?
Highest corono positive count in india last 24 hours
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த 24 மணி நேரத்தில் 6767 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பேரிழப்புகளை ஏற்படுத்திவருகிறது. இந்தியாவிலும் வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதுவரை இந்தியாவில் 131,868 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போதுவரை 54,440 பேர் குணமடைந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3867 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் மஹாராஷ்டிரா மாநிலம் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு அதிகபட்சமாக 47,190 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6767 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 24 மணி நேரத்தில் உறுதி செய்யப்பட்ட பாதிப்புகளில் இதுவே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.