தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சமயலறைக்குல் மலைப்பாம்பு!. ஐந்து அடி நீளமுள்ள மலைப்பாம்பைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெண்!.

சமயலறைக்குல் மலைப்பாம்பு!. ஐந்து அடி நீளமுள்ள மலைப்பாம்பைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெண்!.

house wife shocked in kitchen for snake Advertisement

ஹரியானாவின் குருகிராம் நகரத்தில் வசித்து வருபவர் சதிஷ் குமார் கவுதம். ஆட்டோமொபைல் ஊழியராக பணியாற்றி வரும் இவருக்கு சுமன் என்ற மனைவி உள்ளார்.

இந்நிலையில் சதிஷ் இன்று காலை வேலைக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த சுமன், டீ போடுவதற்காக சமையலறைக்கு சென்றுள்ளார். டீ போடும் பாத்திரத்தை எடுத்து, அடுப்பில் பற்ற வைத்த போது, அலமாறிக்கு அடியில் ஏதோ நகர்ந்து செல்வது போன்று தெரிந்துள்ளது.

இதனால் சந்தேகமடைந்த அவர் சற்று தள்ளி நின்று கவனித்துள்ளார். அப்போது மலைப்பாம்பு ஒன்று சுருண்டு கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அதன் பின் அலறி அடித்து ஓடி வந்து தன்னுடைய கணவனுக்கு போனில் தொடர்பு கொண்டு இது குறித்து கூறியுள்ளார். உடனே அவர் வனவிலங்கு பாதுகாப்புத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.


இருப்பினும் சுமன் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களை வீட்டிற்குள் வரவழைத்துள்ளார். இதையடுத்து சுமன் வீட்டிற்கு வந்த வனத்துறை அதிகாரி ஒருவர் பாம்பை சாதூர்ய்மாக பிடித்துச் சென்று காட்டிற்குள் விட்டுள்ளனர். பிடிக்கப்பட்ட மலைப்பாம்பு 5 அடி நீளம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.snake

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#snake #kitchen #shocked #house wife
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story