பேங்க்ல பணம் டெப்பாசிட் பண்ண போறீங்களா?: அப்போ மொதல்ல இத தெரிஞ்சுக்கோங்க!.
பேங்க்ல பணம் டெப்பாசிட் பண்ண போறீங்களா?: அப்போ மொதல்ல இத தெரிஞ்சுக்கோங்க!.
வங்கிகளில் பண பரிவர்தனைகளின் போது பான் கார்டு மற்றும் ஆதார் எண் அவசியம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
வங்கி பண பரிவர்தனை குறித்து மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியம் அளித்துள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகள் பின்வருமாறு:- ஒருவர் தனது சேமிப்பு கணக்கில் இருந்து ரூ.20 லட்சத்திற்கு மேல் பணம் எடுத்தாலோ அல்லது பணம் டெபாசிட் செய்தாலோ பான் கார்டு மற்றும் ஆதார் எண் அவசியம். ஒரு நிதியாண்டில் ரூ.20 லட்சம் வரையிலான பண பரிவர்தனைகளுக்கு இது பொருந்தாது.
நிதி பரிவர்த்தனைகளில் வெளிப்படை தன்மையை கொண்டுவர, வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தபால் நிலையங்களில், ஒரு நிதியாண்டில் 20 லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேல் பணம் போட்டாலும், எடுத்தாலும் அதற்கு பான் கார்டு அல்லது ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது
அனைத்து வங்கி பரிவர்த்தனையின்போதும் பான் கார்டு எண் அல்லது ஆதார் கார்டு எண்ணை குறிப்பிட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது ஏற்கனவே உள்ள TDS உடன் சந்தேகத்திற்குரிய பண முதலீடுகள் மற்றும் பணம் எடுத்தல் தொடர்பான முழு செயல்முறையை கணகாணிக்க வழிவகுக்கும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.