பிறந்தநாளன்று கணவரின் வருகைக்காக காத்திருந்த மனைவிக்கு வந்த துயர செய்தி! மறுநாளே நேர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்!!
husband dead in wife birthday
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் பிரசாந்த் கொம்மிரெட்டி. இவரது மனைவி திவ்யா. இவர்களுக்கு மூன்று வயதில் பெண் குழந்தை உள்ளது. மேலும் திவ்யா நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இவர்கள் அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் மாகாணத்தில் வசித்து வருகின்றனர். மேலும் பிரசாந்த் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பிரசாந்த் அலுவலகத்தில் தலை மற்றும் கழுத்து வலிப்பதாக கூறியுள்ளார். இதனை கேட்ட அவரது மருத்துவர்கள் உடனே அவரை அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு பிரசாந்தை பரிசோதனை செய்த மருத்துவர்கள், பிரசாந்த் பக்கவாதத்தால் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் அந்நாள் அவரது மனைவி திவ்யாவிற்கு பிறந்தநாள். இந்நிலையில் தனது கணவரின் வருகைக்காக மிகவும் ஆசையாக காத்திருந்த திவ்யாவிற்கு கணவர் பிரசாந்த் இறந்த செய்தியே வந்துள்ளது.
அதனை கேட்டதும் திவ்யா கதறி அழுதுள்ளார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த திவ்யாவிற்கு கணவர் இறந்த மறுநாளே பிரசவ வலி ஏற்பட்டு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில் இவர்களுக்கு உதவி செய்யும் வகையில், பிரசாந்த்தோடு பணிபுரிந்துவந்த ஊழியர் ஆன்லைன்மூலமாக அவரது குடும்பத்திற்கு நிதி திரட்டியுள்ளார். மேலும் அதன் மூலம் இப்போது வரை ரூ.2.7 கோடி நன்கொடை கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.