மனைவி த்ரெட்டிங் செய்ததால் ஆத்திரமடைந்த கணவர்... பின்னர் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்!!
மனைவி த்ரெட்டிங் செய்ததால் ஆத்திரமடைந்த கணவர்... பின்னர் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்!!
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியை சேர்ந்தவர் முகமது சலீம். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு அதே மாநிலம் கான்பூரை சேர்ந்த குல்சபா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு வேலைக்காக மேற்கத்திய நாடான சவுதி அரேபியாவுக்கு சென்றுள்ளார் முகமது சலீம்.
குல்சபா கான்பூரில் வசித்து வந்துள்ளார். குல்சபா தினமும் தனது கணவருடன் வீடியோ கால் மற்றும் பேனில் பேசி வந்துள்ளார். இந்நிலையில் குல்சபா சமீபத்தில் தனது கணவரிடம் கூறாமல் பியூட்டி பார்லருக்கு சென்று தனது புருவத்தை திருத்தியுள்ளார். சலீம் வீடியோ காலில் பேசும் போது குல்சபாவின் புருவங்கள் திருத்தப்பட்டுள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
அதுமட்டுமின்றி என் அனுமதி இன்றி ஏன் பியூட்டி பார்லர் சென்றாய் என்று கூறி மனைவியை கடுமையாக திட்டியதுடன் மூன்று முறை தலாக் கூறி திருமண உறவை முறித்துக் கொண்டார். அதனை அடுத்து குல்சபா மாமியார் மற்றும் அவரது உறவினர்கள் வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாகவும், கணவரும் தன்னை துன்புறுத்துவதாக போலீசில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் முகமது சலீம் மீது மனைவியை துன்புறுத்தியது, வரதட்சணை கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.