×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மனைவியை கொலை செய்து மரப்பெட்டியில் அடைத்த கணவன்.! 2 நாள் ஜாலியா சுற்றியவருக்கு மூன்றாவது நாள் காத்திருந்த அதிர்ச்சி.!

Husband killed wife and hide dead body in wooden box

Advertisement

கணவர் ஒருவர் தனது மனைவியை கொலை செய்து கட்டிலுக்கு அடியில் மனைவியின் சடலத்தை மறைத்துவைத்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போபால் சாகர் நகர் மோட்டினகர் என்னும் பகுதியை சேர்ந்தவர் ஷெர் சிங்  மற்றும் அவரது மனைவி ஆர்டி அஹிர்வார். இவர்களுக்கு 10 வயது குழந்தை ஒன்று உள்ளது. குடிபோதைக்கு அடிமையான ஷெர் சிங் அவ்வப்போது குடித்துவிட்டு தனது மனைவியுடன் சண்டைபோடுவது, அவரை அடித்து துன்புறுத்துவது போன்றவற்றை வழக்கமாக கொண்டுள்ளார்.

இதனால் அவரது மனைவி ஆர்டி அஹிர்வார் தனது 10 வயது குழந்தையுடன் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சில நாட்கள் இருந்த ஆர்டி அஹிர்வார் கடந்த வாரம் தனது குழந்தையை தனது பெற்றோரிடம் கொடுத்துவிட்டு தனியாக தனது கணவன் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இரண்டுநாட்கள் சென்றது, ஷெர் சிங் வழக்கம்போல் மது அருந்துவதற்காக தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்போது மது போதையில் இருந்த ஷெர் சிங், தான பக்கத்து வீட்டிலிருந்து கோடரியைக் கடன் வாங்கியதாகவும், ஒரு கொலை செய்ததாகவும் போதையில் உளறியுள்ளார்.

இதனை கேட்டு சந்தேகமடைந்த அவரது நண்பர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனே போலீசார் ஷெர் சிங் வீட்டிற்கு சோதனைக்காக சென்றபோது வீட்டின் உள்ளே இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. வீடு முழுவதும் சோதனை செய்த போலீசார் கட்டிலின் கீழே இருக்கும் மரபலகையிலான அறையில் இருந்து அழுகிய நிலையில் சடலம் ஒன்றை மீட்டனர்.

உடனே ஷெர் சிங்கை  கைது செய்த செய்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், ஷெர் சிங் தனது  மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்ததும், அவரது உடலை மரப்பெட்டியில் பூட்டி வைத்துவிட்டு எப்போதும் போல் சகஜமாக  வெளியே நடமாடியதும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime #Murder
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story