×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

புதுமண பெண்ணிற்கு அடிக்கடி வந்த போன் கால்.. ஆபாசமாக பேசிய நபர்கள்.. விசாரித்தபோது காத்திருந்த அதிர்ச்சி..

காதலித்து திருமணம் செய்த மனைவியின் ஆந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்ட கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisement

காதலித்து திருமணம் செய்த மனைவியின் ஆந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்ட கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் ஜூனியர் அசிஸ்டெண்டாக வேலை செய்து வருபவர் ரேவந்த். இவரும் திருப்பதி அருகே உள்ள திம்மா நாயுடு பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்துள்ளனர். ஒருகட்டத்தில் இவர்களின் காதல் விவகாரம் இவர்களின் பெற்றோர்க்கு தெரியவர, இரண்டு தரப்பிலும் சம்மதம் தெரிவித்து சமீபத்தில் இவர்களுக்கு விமர்சியாக திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமத்தின்போது வரதட்சணையாக சுமார் 10 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை பெண் வீட்டார் கொடுத்துள்ளனர். திருமணம் முடிந்து ஒருசில மாதங்கள் கணவன் மனைவி இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்துவந்தநிலையில் தனக்கு மேலும் வரதட்சணை வேண்டும் என ரேவந்த் தனது மனைவியிடம் கேட்டுள்ளார்.

ஏற்கனவே தனது திருமணத்திற்கு வாங்கிய கடனே இன்னும் பாக்கி உள்ளதாகவும், இதற்கு மேலும் தன்னால் தனது பெற்றோரிடம் பணம் கேட்க முடியாது எனவும் ரேவந்த்தின் மனைவி கூறியுள்ளார். இதனை கேட்டு கோபமடைந்த ரேவந்த் மிகவும் கீழ்த்தரமான முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

தனது மனைவியுடன் உல்லாசமாக இருந்த புகைப்படம், வீடியோ ஆகியோவற்றை ஆபாச இணையதளத்தில் வெளியிட்டதோடு, தனது மனைவியின் தொலைபேசி எண்ணையும் பதிவிட்டு விபச்சாரத்திற்குத் தொடர்பு கொள்ளுங்கள் எனப் பதிவிட்டுள்ளார்.

இதனை அடுத்து ரேவந்த்தின் மனைவிக்கு பல்வேறு நபர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆபாசமாக பேசியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், இதுகுறித்து விசாரித்தபோது இதற்கெல்லாம் காரணம் தனது கணவன்தான் என்பது தெரிந்து மேலும் அதிர்ந்துபோனார்.

இதனை அடுத்து தனது கணவனுக்கு தக்க பாடம் புகட்ட நினைத்த அவர், இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் ரேவந்த் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

காதலித்து திருமணம் செய்த காதல் கணவனே இப்படி ஒரு மோசமான சம்பவத்தில் ஈடுபட்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime #Abuse
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story