9 நாள் ஆச்சு! ஆட்டோவில் ஏறிய இளம் பெண் இன்னும் வீடு திரும்பவில்லை! தவிக்கும் பெற்றோர்!
Hyderabad girl roshitha missing remains untraced even after 9 days
ஹைதராபாத்தை சேர்ந்த ரோஷிதா(37) என்ற பெண் ஹைதராபாத்தில் உள்ள பிரபல மென்பொருள் நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்துவந்துள்ளார். தனது தோழிகள் சிலருடன் ரோஷிதா வாடகைக்கு வீடு எடுத்து அங்கு தங்கி தினமும் வேலைக்கு சென்றுவந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி வழக்கம்போல் வேலைக்கு சென்ற ரோஷிதா நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தோழிகள் ரோஷிதாவின் பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பெண்ணின் பெற்றோர், உறவினர்கள், தோழிகள் என அனைவரும் பல இடங்களில் தேடியும் ரோஷிதாவை கண்டுபிடிக்கவோ அல்லது தொடர்புகொள்ளவோ முடியவில்லை.
உடனே இதுகுறித்து ரோஷிதாவின் பெற்றோர் காவல் நிலையாயத்தில் புகார் கொடுக்க, போலீசாரும் பல இடங்களில் தேடியுள்ளனர். போலீசாரின் விசாரணையின் முடிவில் அங்கிருந்த பொதுமக்கள் சிலர் இளம்பெண் ஒருவர் கச்சிபவுலிபகுதியிலுள்ள விப்ரோ நிறுவனத்தின் முன்னாள் ஆட்டோவில் ஏறி செல்வதை பார்த்ததாக தெரிவித்தனர்.
இதனை அடுத்து அந்த பகுதிகளில் இருந்த CCTV கேமிரா காட்சிகளை சோதனை செய்ததில் ரோஷிதா அந்த பகுதியில் நடந்து சென்றது மட்டுமே பதிவாகியுள்ளது. அவர் ஆட்டோவில் ஏறியதோ? அல்லது நண்பர்களுடன் சென்றதோ என எந்த காட்சிகளும் இல்லை.
இந்நிலையில் ரோஷிதா காணாமல் போய் 9 நாட்களுக்கு மேலாகும் நிலையில் அவரைப்பற்றிய எந்த தகவலும் இல்லாமல் அவரின் பெற்றோர் தவித்துவருகின்றனர். ரோஷிதா குறித்து எந்த தடயமும் இல்லாமல் போலீசாரும் திணறிவருகின்றனர்.