பட்டாசு விற்பனை கடையில் திடீர் தீவிபத்து; சிதறியோடிய மக்கள்.. பதறவைக்கும் காட்சிகள்.!
பட்டாசு விற்பனை கடையில் திடீர் தீவிபத்து; சிதறியோடிய மக்கள்.. பதறவைக்கும் காட்சிகள்.!
உரிய அனுமதியின்றி செயல்படுத்த பட்டாசுக்கடை தீ விபத்தில் நாசமானது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இந்தியாவெங்கும் இருக்கும் மக்கள் பண்டிகையை கோலாகலமாக கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர். இதற்காக புத்தாடை, பட்டாசு வியாபாரங்கள் என்பது விறுவிறுப்பு பெற்றுள்ளது. பண்டிகை காலத்தையொட்டி பல முன்னணி நிறுவனங்களும் விழாக்கால சலுகை அறிவித்து இருக்கிறது.
இதையும் படிங்க: நாயை துரத்திவந்து சோகம்; ஜன்னல் துவாரத்தில் பாய்ந்து இளைஞர் பரிதாப பலி.. நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்.!
வெடிவிபத்து
பட்டாசு பொருட்களின் விற்பனையை கருத்தில்கொண்டு, அதற்கான முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு இருக்கின்றன. இதனிடையே, தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத், ராம்கோட் பகுதியில் பட்டாசு கடை ஒன்றில் வாடிக்கையாளர்கள் பட்டாசுகளை முண்டியடித்து வாங்கிக்கொண்டு இருந்தனர். அச்சமயம், திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.
Fire | File Pic
சிதறியோடிய மக்கள்
இதனால் பட்டாசு வைக்கப்பட்டு இருந்த கடைக்குள் கரும்புகை சூழ, அங்கிருந்த மக்கள் அலறியபடி ஓட்டம் எடுத்தனர். ஒருசிலர் அங்கேயே நெரிசலில் சிக்கிக்கொண்டனர். அங்கிருந்தவர்கள் சுதாரிப்புடன் செயல்பட்டு அனைவரையும் பத்திரமாக மீட்டனர். நல்வாய்ப்பாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
அனுமதியின்றி செயல்பட்ட்டது
உரிய அனுமதி இன்றி பட்டாசு கடை செயல்பட்டதாக கூறப்படும் நிலையில், நல்வாய்ப்பாக யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு & மீட்பு படையினர், விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பட்டாசுக்கடையில் தீ விபத்து ஏற்பட்டதன் காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் பதைபதைப்பு காட்சிகளும் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: கட்டுக்கட்டா என் பொண்டாட்டி லஞ்சம் வாங்குறா: நேர்மையின் சிகரமாக பாசமிகு கணவர்.! ஆதாரத்துடன் போட்டுக்கொடுத்த சம்பவம்.!