73 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தியாவை வலிமையான நாடாக மாற்றிய மோடியின் ஆட்சி.! இம்ரான் கான்
கடந்த 73 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தியா வலிமை மிக்க நாடாக மாறியுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.
துடிப்பான மற்றும் வலிமையான ஜனநாயகத்திற்கு உலகத்துக்கே முன்னுதாரணமாக இந்தியா உள்ளது என பிரதமர் மோடி சமீபத்தில் தெரிவித்திருந்தார். அதேபோல் இந்தியா உலகத்திற்கே வழிகாட்டியாகவும் வலிமை மிக்க நாடாக பிரதமர் நரேந்திர மோடி மாற்றியுள்ளார், என பா.ஜ., மாநிலத்தலைவர் முருகன் தெரிவித்திருந்தார்.
பாகிஸ்தானின் பயங்கரவாத முகத்தினை பல்வேறு யுக்திகள் மூலம் வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது இந்தியா. மேலும், பாக்கிஸ்தான் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி வழங்கி வந்த நிலையில் இந்தியா அதை நிரூபித்ததால் அந்த நாடு கருப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
அதேபோல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு 370 வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு அதிரடியாக நீக்கியது. பாகிஸ்தான் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கிய விவகாரத்தில் இந்தியா உறுதியாக இருந்தது வருகிறது.
இந்தநிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்திய பிரதமர் மோடியின் ஆட்சியில் கடந்த73 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகுந்த வலிமை மிக்க நாடாக மாறியுள்ளது இந்தியா. எனவே ராணுவம் அதற்கு இணையாக வலிமையை கூட்ட வேண்டிய அவசியம் உள்ளது என தெரிவித்துள்ளார்.