சாப்ட்வேர் எஞ்சினியருக்கே விபூதி அடித்த கேடி: வங்கிக்கணக்கில் இருந்து ரூ.68 இலட்சம் திருட்டு.! இது வேற லெவல் சம்பவம்.!!
சாப்ட்வேர் எஞ்சினியருக்கே விபூதி அடித்த கேடி: வங்கிக்கணக்கில் இருந்து ரூ.68 இலட்சம் திருட்டு.! இது வேற லெவல் சம்பவம்.!!
ஸ்மார்ட் யுகத்தில் பல சாப்ட்வேர் என்ஜினியராக பணியாற்றி வரும் நபருக்கே மோசடி கும்பல் விபூதி அடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு பகுதியை சேர்ந்த 39 வயதுடைய சாப்ட்வேர் எஞ்சினியர், ஓஎல்எக்ஸ் விற்பனைத்தளத்தில் தான் பயன்படுத்திய படுக்கையை மறுவிற்பனைக்கு பதிவிட்டுள்ளார். அதன் தொகையாக ரூ.15 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 06ம் தேதி இரவு 07:00 மணியளவில் சாப்ட்வேர் எஞ்சினியருக்கு தொடர்புகொண்ட மர்ம நபர், தன்னை ரோஹித் மிஸ்ரா என்றும், அங்குள்ள இந்திரா நகர் பகுதியில் பர்னிச்சர் கடை வைத்துள்ளதாகவும் அறிமுகம் செய்துள்ளார். மேலும், விற்பனைக்காக பதிவிடப்பட்ட ரூ.15 ஆயிரம் மதிப்பிலான படுக்கையை தானே வாங்குவதாகுவும் கூறியுள்ளார்.
பணத்தை அனுப்ப யுபிஐ-யில் முயற்சி செய்ததாகவும், பணம் செல்லவில்லை என்பதால் ரூ.5 அனுப்பினால் அத்தொகையுடன் சேர்த்து பணம் மீண்டும் அனுப்புவதாகவும் கூறியுள்ளார். ரூ.5 எஞ்சினியரால் அனுப்பப்பட, ஷர்மா ரூ.10 மீண்டும் அனுப்பியுள்ளார். பின் மீண்டும் பணம் அனுப்பமுடியவில்லை என்று கூறிய ஷர்மா, ரூ.5 ஆயிரம் பணம் அனுப்பச்சொல்லியுள்ளார். ரூ.5 ஆயிரம் அனுப்பியதைத்தொடர்ந்து, ரூ.10 ஆயிரம் திரும்பி அனுப்பப்பட்டுள்ளது.
பின் மீண்டும் முதலில் இருந்து என ரூ.7500 க்கு ரூ.15 ஆயிரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன்பின் மீண்டும் எஞ்சினியரை தொடர்புகொண்ட சர்மா, தவறுதலாக தங்களின் கணக்குக்கு ரூ.30 ஆயிரம் பணம் அனுப்பிவிட்டேன். மீண்டும் அதனை பெற லிங்க் அனுப்புகிறேன். அதில் வரும் ஓடிபி-ஐ கூறுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
சாப்ட்வேர் எஞ்சினியரும் எவ்வித சந்தேகமும் இன்றி லிங்கை கிளிக் செய்து ஓடிபி சொன்னதும் பணம் இழக்கப்பட தொடங்கியுள்ளது. லிங்க் வடிவில் பணம் செலுத்தப்பட்டதாக வந்த தகவலை நம்பி மோசடி நடத்தப்பட்டுள்ளது. முதலில் எஞ்சினியர் பர்னிச்சர் கடை ஓனர் விபரமறியாத நபராக இருக்கலாம் என அலட்சியமாக செயல்பட்டுள்ளார்.
இந்த அலட்சியமே மோசடி கும்பலுக்கு மிகவும் வசதியாக அமைந்துள்ளது. நுணுக்கமான வார்த்தைகள் பேசிய கேடி கும்பல், ரூ.15 இலட்சம் இரண்டு தவணையாக, ரூ.30 இலட்சம் ஒரே தவணையாக, மீதி சில்லறை என ரூ.68.6 இலட்சத்தை மோசடியாக பெற்றுள்ளது.
தாமதமாக தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த எஞ்சினியர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து கருத்து தெரிவித்த காவல் துறையினர், பொதுவாக இவ்வாறான மோசடியில் அதிகபட்சமாக ரூ.3 இலட்சம் முதல் 5 இலட்சம் வரை இழந்தவற்றை நாங்கள் சந்தித்து இருக்கிறோம்.
ஆனால், முதல் முறையாக இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டு ரூ.68 இலட்சம் இழந்தவரை இன்றுதான் பார்க்கிறோம். மோசடியாளர்கள் அனுப்பிய லிங்கை கிளிக் செய்து, ஓடிபி பகிர்ந்ததே மோசடியான முக்கியமான காரணமாக அமைந்துவிட்டது என கூறினர்.