போதை ஆசாமியால் சோகம்; தம்பதி விபத்தில் சிக்கி பலி..!
போதை ஆசாமியால் சோகம்; தம்பதி விபத்தில் சிக்கி பலி..!

பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னா, ஜாகிதியோ சாலையில், நேற்று இரவு நேரத்தில் கார் ஒன்று சென்றுகொண்டு இருந்தது. இந்த சாலையில் செண்ரடபோது, இருசக்கர வாகனத்தின் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
விபத்தை ஏற்படுத்திய காரணத்தால், கார் ஓட்டுநர் பிரேக் அடித்த நிலையில், இவர்களுக்கு பின்னால் வந்த வேன் ஒன்று காரில் மோதி விபத்தில் சிக்கியது. அடுத்தடுத்து நடந்த விபத்தில், இருசக்கரவாகனத்தில் பயணம் செய்த தம்பதி படுகாயமடைந்தனர்.
இதையும் படிங்க: டெல்லியைத் தொடர்ந்து பீகார் மாநிலத்திலும் நிலநடுக்கம்; மக்கள் பீதி.!
விபத்தில் சிக்கி சோகம்
மேலும், வேனில் இருந்த 4 பேர் காயமடைந்தனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், கார் ஓட்டுநர் போதையில் விபத்தை ஏற்படுத்தியது உறுதியானதால், அவர் கைது செய்யப்பட்டார்.
இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யபட்ட தம்பதிகள் இருவரும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விஷயம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: எமனை நேரில் பார்த்து வந்த இளைஞர்கள்; அலட்சியத்தால் சக்கரத்தில் சிக்கியும் காத்திருந்த அதிஷ்டம்.!