லோன் கொடுப்பதாக 900 கோழிகளை தின்று ஏப்பம் விட்ட எஸ்பிஐ வங்கி மேலாளர்; உரிமையாளர் கதறல்.!
லோன் கொடுப்பதாக 900 கோழிகளை தின்று ஏப்பம் விட்ட எஸ்பிஐ வங்கி மேலாளர்; கோழிப்பண்ணை உரிமையாளர் கதறல்.!
பண்ணையை விரிவுபடுத்த லோன் கேட்ட உரிமையாளரிடம், 900 நாட்டு கோழிகளை வாங்கி சாப்பிட்டு ஏப்பம் விட்ட வங்கி மேலாளரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிலாசபுர மாவட்டம், சரகவான் கிராமத்தில் வசித்து வருபவர் ரூபிசந்த் மன்ஹார். இவர் கோழிப்பண்ணை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இவர் தனது பண்ணையை விரிவுபடுத்த எண்ணி மஸ்தூரி நகரில் செயல்பட்டு வரும் எஸ்.பி.ஐ வங்கியில் கடன் உதவி கேட்டுள்ளார்.
இலஞ்சம் கொடுத்தார்
முதலில் வங்கியின் மேலாளர் கடன் தொகையை அனுமதித்து இருந்த நிலையில், அதற்கு 10% கமிஷனும் கேட்டுள்ளார். கோழிப்பண்ணையை விரிவுபடுத்திய மன்ஹார், தனது கோழிகளை விற்பனை செய்து கமிஷனுக்கான தொகையை கொடுத்து இருக்கிறார்.
இதையும் படிங்க: பங்குச்சந்தை முதலீடு மோசடி; ரூ.52 இலட்சத்தை பறித்த இளைஞர் கைது.. ஆசை வார்த்தை கூறி பகீர்.!
கடன் கொடுப்பதாக மோசடி
இதனிடையே, ஒவ்வொரு வாரம் சனிக்கிழமையும் மன்ஹாருக்கு தொடர்பு கொண்ட வங்கியின் மேலாளர், ரூ.12 இலட்சம் லோன் ஏற்படுத்தி கொடுப்பதாக கோழியை வாங்கி இருக்கிறார். லோன் கிடைக்கும் என மன்ஹாரும் வேறு வழியின்றி கோழியை அனுப்புவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
900 கோழிகள் இறை
இவ்வாறாக பல ஆண்டுகள் கடந்தும் லோன் கிடைத்தபாடில்லை. இறுதியில் மன்ஹார் கணக்கிட்டபோது, வங்கியின் மேலாளர் ரூ. 38,900 மதிப்புள்ள கோழிகளை சாப்பிட்டது தெரியவந்தது. மொத்தமாக சுமார் 900 நாட்டு கோழிகளை வங்கி மேலாளர் வாரா-வாரம் வாங்கி ஏப்பம் விட்டு இருக்கிறார்.
தற்கொலைக்கு வங்கி அதிகாரி தான் காரணம்
ஒருகட்டத்தில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மன்ஹார், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், எனக்கான லோன் தொகை அல்லது நான் ஏமாற்றப்பட்ட பணம் கிடைக்காத பட்சத்தில், வங்கி அலுவலகம் முன்பு தீக்குளித்து தற்கொலை செய்துகொள்வேன் என தெரிவித்து இருக்கிறார். மேலும், எனது மரணத்திற்கும் வங்கியின் மேலாளர் சுமன் குமார் சௌதாரி தான் எனவும் மன்ஹார் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இளம்பெண்ணின் ஆடையை கழற்றச்சொல்லி டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி.. மக்களே உஷார்.!