எச்சரிக்கையை மீறி மெரினாவில் ஆனந்த குளியல்.. இன்பசுற்றுலா இறுதிச் சுற்றுலாவான சோகம்.! கல்லூரி மாணவர் பலி.!
எச்சரிக்கையை மீறி மெரினாவில் ஆனந்த குளியல்.. இன்பசுற்றுலா இறுதிச் சுற்றுலாவான சோகம்.! கல்லூரி மாணவர் பலி.!
அதிகாரிகளின் எச்சரிக்கையையும் மீறி கடலில் குளித்த கல்லூரி மாணவர் பலியானார்.
சென்னையில் உள்ள மயிலாப்பூர், விவேகானந்தா கல்லூரியில் பயின்று வரும் மாணவர்களில், 7 பேர் இன்று மெரினா கடற்கரைக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். நண்பர்கள் அனைவரும் இன்று தங்களின் திட்டப்படி மெரினா சென்றுள்ளனர்.
அங்கு கடலின் அழகை ரசித்தவர்கள், ஆர்வமிகுதியால் அதில் இறங்கி குளிக்க முற்பட்டுள்ளனர். மெரினாவில் ராட்சத அலை அபாயம் காரணமாக, அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் இரவு 10 மணிவரை 5 மாவட்டங்களில் இடி-மின்னலுடன் மழை; ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்.!
கண்டிப்பாய் மீறி குளியல் கதை முடிந்த சோகம்
இதனிடையே, மாணவர்களை கண்ட காவலர்கள் எச்சரித்து இருக்கின்றனர். இதனையும் மீறி 2 மாணவர்கள் அதிகாரிகள் கண்களில் இருந்து விலகி கடலுக்குள் சென்று குளித்துள்ளனர். அப்போது, அவர்களில் ஒருவர் கடலுக்குள் அலையால் இழுத்து செல்லப்பட்டார்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த மீட்பு படையினர், விரைந்து செயல்பட்டு கல்லூரி மாணவரை மீட்க முயற்சித்தனர். ஆனால், ஆலைக்குள் சிக்கி கடலுக்குள் இழுத்து செல்லப்பட்ட மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் சடலமாகவே மீட்கப்பட்டார்.
இதையும் படிங்க: #Breaking: நெருங்குகிறது... 11 மாவட்டங்களில் நாளை விடுமுறை; புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!