பெண்கள் பெட்டியில் உனக்கென்ன வேலை? பளார் கொடுத்து அனுப்பப்பட்ட ஆண்கள்.. டெல்லியில் சம்பவம்.!
பெண்கள் பெட்டியில் உனக்கென்ன வேலை? பளார் கொடுத்து அனுப்பப்பட்ட ஆண்கள்.. டெல்லியில் சம்பவம்.!
இந்தியாவின் தலைநகரான டெல்லியில், மக்களின் போக்குவரத்துக்கு வசதியாக மெட்ரோ இரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. டெல்லி மெட்ரோவில் நாளொன்றுக்கு இலட்சக்கணக்கில் பயணம் செய்கின்றனர். வார இறுதி விடுமுறை நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.
டெல்லி மெட்ரோவின் முந்தைய சம்பவங்கள்
பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு கூடுதல் ரயில்களும் வார இறுதி நாட்களில் இயக்கப்படுகின்றன. அவ்வப்போது டெல்லி மெட்ரோவில் கவர்ச்சி காண்பித்து வீடியோ எடுத்தது, கட்டில் சம்பவத்தை இரயிலுக்குள் நிகழ்த்தியது, முத்தம் கொடுத்தது என பல வீடியோ காட்சிகள் வெளியாகி சர்ச்சை உண்டாகி வந்தன.
பெண்கள் மட்டும்
இதனிடையே, கூட்ட நெரிசலான நேரத்தில் ஆண் பயணிகள் பெண்களுக்கு மட்டும் தனிப்பட்டு வழங்கும் பெட்டிக்குள் ஏறியதாக தெரியவருகிறது. இந்த தகவல் காவல் துறையினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இரயிலின் வருகைக்கு காத்திருந்த அதிகாரிகள், இரயில் வந்ததும் தங்களின் பணியை தொடங்கினர்.
இதையும் படிங்க: காதல் ஜோடிகளுக்குள் சண்டை.. மணிக்கட்டை அறுத்த காதலி., மாரடைப்பில் பலியான காதலன்.! பகீர் சம்பவம்.!
பளார் வைத்து அனுப்பிய அதிகாரிகள்
பெண்களின் பெட்டிக்குள் நின்ற ஆண்களை வெளியே இழுத்து பளார் வைத்து அனுப்பிய அதிகாரிகள், அதற்குப்பின் இரயிலை புறப்பட்டு செல்ல அனுமதி செய்தனர். இந்த விஷயம் குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.
பெண்களின் பாதுகாப்புக்கு என தனிப்பட்ட பெண்கள் பெட்டியில் ஆண்கள் பயணிப்பது குற்றமாகும். சென்னை புறநகர் இரயில் சேவையிலும் இதே போல மகளிர் மட்டும் பெட்டி இருக்கிறது. அதில் ஆண்கள் எவ்வுளவு கூட்டமாக இருந்தாலும் ஏறமாட்டார்கள். மீறினால் சட்டம் தன் கடமையை செய்யும்.
அதிகாரிகளின் இந்த செயல் ஒருபக்கம் பாராட்டுகளை பெற்றாலும், மற்றொரு பக்கம் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கண்டனமும் குவிகிறது.
இதையும் படிங்க: மனைவியுடன் சிறுவன் கள்ளத்தொடர்பு.? கழுத்தை நெரித்து கொடூர கொலை.!! பரபரப்பு வாக்குமூலம்.!!