டெல்லியை ஒரேஇரவில் புரட்டிப்போட்ட கனமழை; தாழ்வான இடங்களில் வெள்ளம் தேங்கி மக்கள் அவதி.!
டெல்லியை ஒரேஇரவில் புரட்டிப்போட்ட கனமழை; தாழ்வான இடங்களில் வெள்ளம் தேங்கி மக்கள் அவதி.!
தென்மேற்கு பருவமழையானது தொடங்கி இருப்பதால், கேரளா முதல் டெல்லி வரையிலான மேற்கு மற்றும் வடக்கு, வடகிழக்கு மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான இடங்களில் வெள்ளம் புகுந்து மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ஒருசில நேரம் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது.
இந்நிலையில், நேற்று டெல்லி மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக, அங்குள்ள பல்வேறு இடங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. நகரின் முக்கிய வீதிகளில் வெள்ள நீரானது தேங்கி இருக்கிறது. தாழ்வான பகுதிகளில் தேங்கிய வெள்ளம் காரணமாக, நகரின் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: ஓட்டுனரின் உறக்கத்தால் உருண்டு உருக்குலைந்த கார்; ஒருவர் பலி., 5 பேர் படுகாயம்.. பதறவைக்கும் வீடியோ.!
நேற்று ஒரேநாள் இரவில் பெய்த கனமழை, டெல்லி மற்றும் அதன் புறநகர் பகுதிகளான நொய்டா ஆகிய பகுதிகளில் கடுமையான வெள்ளத்தினை ஏற்படுத்தி இருக்கின்றன. இவ்வாறான தருணங்கள் டெல்லி மக்களுக்கு பருவமழை காலங்களில் புதிதில்லை எனினும், அவர்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர். வேலைக்கு செல்வோர் பலரும், அவதிப்பட தொடங்கியுள்ளனர்.
டெல்லி கனமழை வெள்ளம்
இதையும் படிங்க: சோலா பூரியில் இறந்து கிடந்த பல்லி; சுவையாக பொறித்து வைக்கப்பட்டதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி.!