கம்பியூட்டர் வேலை வேண்டாம்; விரலை வெட்டிக்கொண்ட நபர்.. அதிர்ச்சியூட்டும் சம்பவம்.!
கம்பியூட்டர் வேலை வேண்டாம்; விரலை வெட்டிக்கொண்ட நபர்.. அதிர்ச்சியூட்டும் சம்பவம்.!
குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் பகுதியில் வசித்து வருபவர் மயூர் தாராபரா. இவர் தனது தந்தைவழி உறவினரான அனுப் என்பவரின் வைர நிறுவனத்தில், கம்பியூட்டர் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார்.
இதனிடையே, சம்பவத்தன்று இடதுகை விரல்கள் வெட்டப்பட்ட நிலையில் மயூர் வீட்டிக்குள் வருகை தந்தார். அவரிடம் குடும்பத்தினர் பதறியபடி கேள்வி எழுப்பியும் பதில் இல்லை. இதனால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரை ஏற்ற காவல்துறையினர் விசாரித்தபோது, நண்பரின் வீட்டிற்கு சென்றபோது சாலையோரம் மயங்கி விழுந்ததாகவும், பின் எனது விரலை காணவில்லை எனும் கூறியுள்ளார். இதனால் சூனியம் வைக்க விரல் வெட்டப்பட்டதா? என குடும்பத்தினரின் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடந்தது.
இதையும் படிங்க: #Watch: "என் போனை விடு" - சிறுமியின் கைகளில் இருந்து செல்போன் பறிப்பு.. இரயில் பயணத்தில் பகீர்.!
வேலை பிடிக்காமல் விரக்தியில் அதிர்ச்சி செயல்
விசாரணையில் மயூரின் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் எழவே, அவரிடம் நடந்த விசாரணையில் உண்மை அம்பலமானது. அதாவது, தானே கடையில் கத்தி வாங்கி, இரவு 10 மணியளவில் விரலை துண்டித்து இருக்கிறார்.
குடும்ப நண்பரின் கடையில் வேலைக்கு சேர்ந்த நிலையில், பணிக்கு செல்ல விருப்பம் இல்லை. அதனை சொல்லும் தைரியமும் இல்லை. இதனால் கையில் விரல் இல்லை என்றால், கணினியில் வேலை செய்ய இயலாது என விரலை வெட்டிக்கொண்டதாக கூறியுள்ளார்.
இதனால் அவருக்கு அறிவுரை வழங்கிய காவல்துறையினர், கண்டிப்புடன் அனுப்பி வைத்தனர். மயூருக்கு திருமணம் முடிந்து மனைவி, 2 வயதுடைய பெண் குழந்தை இருக்கிறது.
இதையும் படிங்க: அட கொடுமையே... செல்போனை பிடுங்கியாதால் ஆத்திரம்.!! ஆசிரியருக்கு கத்திக்குத்து.!!