சமைக்க தாமதமானதால் ஆத்திரம்; மகளை குக்கரால் அடித்துக்கொன்ற தந்தை.!
சமைக்க தாமதமானதால் ஆத்திரம்; மகளை குக்கரால் அடித்துக்கொன்ற தந்தை.!
வீட்டில் இருந்த பிற பணிகளால் உணவு சமைக்காத தாமதமான நிலையில், மகளை தந்தை குக்கரால் அடிஇத்தே கொன்றார்.
குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் பகுதியில் வசித்து வருபவர் முகேஷ் பரமர் (வயது 40). இவர் ஆட்டோ ஓட்டுநராக இருந்து வருகிறார். தற்போது உடல்நலம் பாதிக்கப்பட்டு சரிவர பணிகளுக்குச் செல்லவில்லை.
சமையல் செய்ய தாமதம்
இவருக்கு திருமணம் முடிந்து மனைவி, மற்றும் கடாலி என்ற 18 வயதுடைய மகள் இருக்கிறார். சம்பவத்தன்று கடாலி வீட்டில் உள்ள பிற வேலைகளை கவனித்து வந்துள்ளார். இதனால் சமையல் செய்ய தாமதமானதாக தெரிய வருகிறது.
இதையும் படிங்க: பாஜக மகளிரணி நிர்வாகி வீட்டில் மர்ம மரணம்; தூக்கில் தொங்கியவாறு சடலம் மீட்பு.!
தலையில் அடித்து கொலை
இந்த விஷயம் தொடர்பாக தந்தை - மகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த முகேஷ் ஒரு கட்டத்தில் குக்கரை எடுத்து மகளின் தலையில் பயங்கரமாக தாக்கி இருக்கிறார். இந்த சம்பவத்தில் சிறுமி கடாலி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மகள் கொலை
சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்தகாவல்துறையினர், முகேஷ் பரமரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: "என்னை பார்த்து சிரிச்சா, கொன்னு கற்பழிச்சிட்டேன்" - சைக்கோ சீரியல் கில்லர் திடுக் வாக்குமூலம்.!