நண்பனின் மனைவி குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டி அத்துமீறல்; அனுதினமும் நடந்த பதறவைக்கும் கொடுமை.!
நண்பனின் மனைவி குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டி அத்துமீறல்; அனுதினமும் நடந்த பதறவைக்கும் கொடுமை.!

நண்பர் தானே என நம்பி வீட்டிற்குள் அனுமதித்தற்கு, 55 வயது நபர் செய்த வேலை அதிர்ச்சியை தந்துள்ளது.
ஹரியானா மாநிலத்தில் உள்ள நூஹ் மாவட்டத்தில் வசித்து வருபவர் முகுந்த் என்ற பாபி (வயது 55). இவருக்கு நண்பர் ஒருவர் இருக்கிறார். அந்த நண்பருக்கு திருமணம் முடிந்து மனைவி இருக்கிறார்.
இதையும் படிங்க: இளம்பெண்கள் கூட்டுப்பாலியல் பலாத்காரம்; பாஜக தலைவர், பிரபல பாடகர் மீது பரபாபு புகார்.!
பாபி தன்னை நல்லவர் போல காண்பித்துக்கொண்டு வந்த நிலையில், அவ்வப்போது நண்பரின் வீட்டிற்கு சென்று வருவதை வழக்கப்படுத்தி இருக்கிறார். இதனிடையே, கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பாபி தனது நண்பரின் மனைவி குளிப்பதை வீடியோ பதிவு செய்துள்ளார்.
பலவந்தப்படுத்தி பலாத்காரம்
இதனை வைத்து பெண்ணை மிரட்டியவர், பலவந்தப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின் அதனையும் வீடியோ எடுத்து வைத்து மிரட்டிய பாபி, வேறொரு நபருடன் பெண் உல்லாசமாக இருக்க வற்புறுத்தி இருக்கிறார். இவ்வாறான செயல்கள் 12 க்கும் மேற்பட்ட முறைகள் தொடர்ந்து இருக்கிறது.
மிரட்டி சீரழிப்பு
பெண்ணின் கணவர் காலையில் வேலைக்கு சென்றால், மாலையில் தான் வீடு திரும்புவார். இதனை தனக்கு சாதகமாக்கிய நபர், பெண்ணை தொடர்ந்து மிரட்டி சீரழித்து வந்துள்ளார். ஒருகட்டத்தில் பெண்ணின் கணவர் வேலைக்குச் சென்றபின்னர், தினமும் வீட்டிற்கு வந்து பலாத்காரம் கொடுமை அரங்கேற்றப்பட்டுள்ளது.
கணவரிடம் சொல்லி வெளிவந்த உண்மை
மேலும், தினமும் தான் சொல்லும் நபர்களுடன் நீ உல்லாசமாக இருக்க வேண்டும் எனவும் வற்புறுத்தியுள்ளார். இதனால் மனவேதனையில் உச்சக்கட்டத்திற்கு சென்ற பெண்மணி, தனது கணவரிடம் கண்ணீர்ப்பட நடந்ததை கூறி இருக்கிறார். இதனையடுத்து, அவர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, அதிகாரிகள் 55 வயதுடைய முகுந்த் என்ற பாபியை கைது செய்தனர்.
பெண்ணை பலாத்காரம் செய்த பிற குற்றவாளிகளுக்கு அதிகாரிகள் வலைவீசி இருக்கின்றனர்.
இதையும் படிங்க: 16 வயது சிறுமியை காரில் கடத்தி சீரழித்த இளைஞர்; ஓடும் காரில் இருந்து தள்ளிவிட்டு பெருங்கொடுர செயல்.!