குழந்தை பிறந்த மகிழ்ச்சியில், குளிரில் விரைத்து உயிரிழந்த தந்தை; மருத்துவமனை வளாகத்தில் சோகம்.!
குழந்தை பிறந்த மகிழ்ச்சியில், குளிரில் விரைந்து உயிரிழந்த தந்தை; மருத்துவமனை வளாகத்தில் சோகம்.!
கையில் சிறிதளவு செலவுக்கு கூட பணம் இல்லாமல் தவித்துப்போன கணவர், மனைவியின் பிரசவம் முடிந்து, குழந்தை பிறந்த செய்தி கேட்டதும், கடும் குளிரில் மருத்துவமனை வளாகத்தில் உறங்கி உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூர், செழுவாம்பா மருத்துவமனையில் 35 வயதுடைய சிவகோபாலய்யா என்பவர் அசித்து வருகிறார். 35 வயதாகும் இவருக்கு திருமணம் முடிந்து அஸ்வத்தம்மா என்ற மனைவி இருக்கிறார். இவர்கள் அங்குள்ள குண்டலுபேட்டை, சௌடல்லி கிராமத்தில் வசித்து வருகிறார்கள்.
இதையும் படிங்க: பசுவின் மடியை அறுத்த நபர்; போதையில் அரங்கேறிய பயங்கரம்.!
இதனிடையே, கர்ப்பமாக இருந்த அஸ்வத்தம்மா, பிரசவத்திற்காக செழுவாம்பா மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். அங்கு பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், மனைவிக்கு குழந்தை பிறந்த காரணத்தால், கணவர் மருத்துவமனை வளாகத்தில் வெளியில் உறங்கி இருக்கிறார்.
ரூ.30 கூட காசு இல்லாமல் சோகம்
இதனிடையே, அன்றைய இரவில் கடும் குளிர் இருந்த நிலையில், மருத்துவமனை வளாகத்தில் உறங்கியபடி கடுமையான குளிர் காரணமாக உறக்கத்திலேயே உயிரிழந்தார். சிவகோபாலய்யா ரூ.30 கட்டணம் செலுத்தி அறை எடுக்கும் நிலையில் கூட இல்லை. குடும்பம் கஷ்டத்தில் இருந்த நேரத்தில், மனைவிக்காக அவர் மருத்துவமனை வெளியிலேயே தங்கி இருந்துள்ளார்.
அப்போதுதான் இந்த சோகம் நடந்துள்ளது. கையில் கொஞ்சம் கூட பணம் இல்லாமல், உணவுக்கும் பணம் இல்லாமல் தவித்த சிவகோபாலய்யாவுக்கு, நண்பர் சுரேஷ் என்பவர் உணவு வாங்கி கொடுத்துள்ளார். இரவு நேரத்தில் வேறு வழியின்றி மருத்துவமனை வளாகத்தில் உறங்கியபோது, இந்த சோகம் நடந்துள்ளதாக தெரியவருகிறது. இந்த விஷயம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: போதையில் அடவாடி செய்த மாப்பிள்ளை தோழர்கள்.. திருமணத்தை நிறுத்தி ஷாக் கொடுத்த மாமியார்.!