Watch: வாலை பிடித்து ஒரே இழு.. சிறுத்தையை தீரத்துடன் பிடித்து வலைக்குள் வீசிய விவசாயி.! வைரல் வீடியோ இங்கே.!
Watch: வாலை பிடித்து ஒரே இழு.. சிறுத்தையை தீரத்துடன் பிடித்து வலைக்குள் வீசிய விவசாயி.! வைரல் வீடியோ இங்கே.!
பொதுமக்களை அச்சுறுத்திய சிறுத்தை அதிகாரிகளின் பிடியில் இருந்து தப்ப முயன்றபோது, விவசாயி ஒருவர் தீரத்துடன் வாலைப்பிடித்து இழுத்து வலைக்குள் தள்ளிய சம்பவம் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள துமகூரு மாவட்டம், திபாதூர், கிரெகோடி ரெங்காபூர் பகுதியில் கடந்த சில நாட்களாகவே சிறுத்தையின் நடமாட்டம் என்பது அதிகம் இருந்துள்ளது.
இதையும் படிங்க: அலட்சியத்தால் சோகம்.. மின்மோட்டார் வயரை பிடித்த ஒன்றரைவயது குழந்தை மின்சாரம் தாக்கி பலி.!
இதனால் வனத்துறையினர் சிறுத்தைக்கு ஆங்காங்கே கூண்டு வைத்து பிடிக்கும் முயற்சியில் இறங்கி இருந்தனர். இதனிடையே, நேற்று சிறுத்தை கிராமத்திற்குள் புகுந்துள்ளது.
சிறுத்தை வாலைப்பிடித்த விவசாயி
வனத்துறையினர் ஏற்படுத்தி வைத்திருந்த கூண்டு மற்றும் வலையின் அருகே சிறுத்தையை விரட்டிய நிலையில், அது பதறியபடி ஓட்டம் பிடித்தது.
பின் மீண்டும் வனத்திற்குள் சிறுத்தை தப்பிச்செல்ல முற்பட்ட நிலையில், விவசாயி ஒருவர் சிறுத்தையின் வாலை பிடித்து இழுத்து வலைக்குள் விழவைத்தார்.
இதனை சற்றும் எதிர்பாராத அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆடிப்போனாலும், விரைந்து சிறுத்தையை பிடித்தனர். தற்போது அந்த சிறுத்தை மைசூர் சிறுத்தை பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளது.
விவசாயியின் தீர செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
பின்குறிப்புஉரிய தைரியம், சுதாரிக்கும் புத்திகூர்மை இன்றி இவ்வாறான செயலை செய்ய வேண்டாம். அது உங்களின் உயிருக்கு எமனாக மாறவும் வாய்ப்புண்டு.
இதையும் படிங்க: 8 வயதில் நடக்குற சோகமா இது? மாரடைப்பால் பள்ளியில் பறிபோன உயிர்.!