17 வயது கர்ப்பிணி சிறுமி காய்ச்சலால் மரணம்.. 18 வயது இளைஞன் பகீர் வாக்குமூலம்.!
17 வயது கர்ப்பிணி சிறுமி காய்ச்சலால் மரணம்.. 18 வயது இளைஞன் பகீர் வாக்குமூலம்.!
காய்ச்சலால் உயிரிழந்த சிறுமி கர்ப்பமாக இருப்பது உறுதியான நிலையில், 18 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார்.
கேரளா மாநிலத்தில் உள்ள ஆலப்புழா மாவட்டத்தில், 17 வயதுடைய சிறுமி வசித்து வருகிறார். இவர் சமீபத்தில் உயிரிழந்த நிலையில், உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
5 மாத கர்ப்பம்
அப்போது, சிறுமி 5 மாத கர்ப்பம் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, காவல்துறையினர் சிறுமியின் மரணம் தொடர்பாகவும், அவரின் பலாத்கார செயல் தொடர்பாகவும் விசாரணை நடத்தி வந்தனர்.
இதையும் படிங்க: மாயமான இளம்பெண்ணின் உடல் ஆற்றில் சடலமாக மீட்பு.. நடந்தது என்ன?.. பெற்றோர் கண்ணீர்.!
மாணவர் கைது
இதனிடையே, மாணவியுடன் படித்து வந்த சக மாணவரான 18 வயது அகில் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். விசாரணையில், இவர்கள் இருவரும் நட்பு ரீதியாக பழகி வந்த நிலையில், காதல் வயப்பட்டு இருக்கின்றனர்.
காதல் பெயரில் பகீர்
சம்பவத்தன்று, சிறுமியின் வீட்டில் பெற்றோர் இல்லாத நேரத்தில், அவரின் வீட்டிற்கு சென்ற அகில், காதல் வார்த்தை பேசி அத்துமீறி இருக்கிறார். இதனால் சிறுமி கர்ப்பமான நிலையில், தற்போது அவர் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையும் படிங்க: மகளை மிரட்டி சீரழித்த தந்தைக்கு 141 ஆண்டுகள் சிறை தண்டனை; கேரளா நீதிமன்றம் அதிரடி.!