"நீ கலரா இல்லை, இங்கிலிஷ் பேச தெரியலை" - சித்ரவதையால் புதுமணப்பெண் தற்கொலை.!
நீ கலரா இல்லை, இங்கிலிஷ் பேச தெரியலை - சித்ரவதையால் புதுமணப்பெண் தற்கொலை.!
திருமணம் முடிந்த சில மாதங்களில் வரதட்சணை கேட்டு, இல்லாத காரணம் கூறியவர்கள் பெண்ணை தற்கொலைக்கு விதித்துள்ளனர்.
புதுமணத்தம்பதி
கேரளா மாநிலத்தில் உள்ள மலப்புரம், கொண்டட்டி பகுதியில் வசித்து வந்தவர் சஹானா மும்தாஜ் (வயது 19). இவரின் கணவர் அப்துல் வஹீத். இவர்கள் இருவருக்கும் திருமணம் சில மாதங்களுக்கு முன்னதாகவே நடைபெற்று முடிந்தது.
இதையும் படிங்க: மனைவியை கொலை செய்து தானும் தூக்கில் தொங்கிய கணவர்; கள்ளக்காதல் பழக்கத்தால் விபரீதம்.!
வரதட்சணை கேட்டு கொடுமை
இதனிடையே, திருமணம் நடைபெற்று முடிந்ததில் இருந்து, சஹானாவின் நிறத்தை மேற்கோளிட்டு நீ நல்ல நிறத்துடன் இல்லை. உனக்கு சரிவர ஆங்கிலம் பேச தெரியவில்லை. கூடுதல் வரதட்சணை வாங்கி வா என பிரச்சனை செய்துள்ளனர்.
மனஉளைச்சலில் தற்கொலை
இதனால் மனஉளைச்சலில் இருந்த பெண்மணி, கடந்த ஜனவரி 14 அன்று தற்கொலை செய்துகொண்டார். இந்த விஷயம் குறித்து காவல்துறையினர் விசாரணை முன்னெடுத்து இருக்கின்றனர். புதுமணப்பெண் திருமணம் முடிந்த சில மாதங்களில் தற்கொலை செய்தது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: காதலியுடன் பிரேக்கப்; கெஞ்சியும் காதலை ஏற்காததால் உயிரையே விட்ட காதலன்.! கம்பி என்னும் காதலி.!!