பள்ளி வளாகத்தில் குழந்தை பெற்ற 16 வயது சிறுமி; விசாரணையில் அதிர்ச்சி தகவல் அம்பலம்.!
பள்ளி வளாகத்தில் குழந்தை பெற்ற 16 வயது சிறுமி; விசாரணையில் அதிர்ச்சி தகவல் அம்பலம்.!
அரசுப்பள்ளி ஒன்றில் மாணவி குழந்தையை பெற்றெடுத்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள சாகர் மாவட்டம், பங்கஜ் பிரஜாபதி பகுதியில் செயல்பட்டு வரும் அரசுப்பள்ளியில், 16 வயதுடைய சிறுமி படித்து வருகிறார். சம்பவத்தன்று பள்ளி வளாகத்தில் இருந்து பிறந்த பச்சிளம் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இந்த விஷயம் தொடர்பாக சன்பிலா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், 16 வயது சிறுமி சந்தேகத்திற்கு இடமான வகையில் செயல்பட்டுள்ளார். இதனால் அவரிடம் விசாரணை நடத்தியபோது, குழந்தை அவருக்கு பிறந்தது தெரியவந்தது.
இதையும் படிங்க: நெஞ்சமெல்லாம் பதறுதே.. கை-கால்களை உடைத்து., 4 வயது சிறுமி பலாத்காரம் & கொலை; ரணகொடூரம்..!
சிறுமி பலாத்காரம்
மேலும், சிறுமி அவரின் சொந்த மாமாவால் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில், அதனால் குழந்தை பிறந்துள்ளதும் உறுதியானது. கடந்த டிசம்பர் 2 அன்று சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ளது. அவர் 11ம் வகுப்பு பயின்று வந்த நிலையில், கர்ப்பம் தரித்தது தெரியாமல் இருந்து வந்துள்ளார்.
பள்ளி வளாகத்தில் பிரசவம்
இறுதியாக பள்ளி வளாகத்தில் அவர் குழந்தையை பெற்றெடுக்க, வேறு வழியின்றி அதனை கொலை செய்துள்ளார். குழந்தையின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றி நடந்த விசாரணையில் உண்மை அம்பலமானதைத்தொடர்ந்து, சிறுமியின் மாமா கைது செய்யப்பட்டார்.
கயவன் கைது
16 வயது சிறுமியின் தாயும் மகளின் கர்ப்பத்தை அறிந்திருக்கவில்லை. குடும்ப வறுமையால் சிறுமி வேலைக்கு சென்று, படிப்பையும் கவனித்து வந்துள்ளார். இதற்கிடையில் தான் இத்துயரம் நடந்துள்ளது. சிறுமியின் மாமாவிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதையும் படிங்க: 17 வயது சிறுமி பலாத்காரம், வீடியோ எடுத்து மிரட்டல்; 2 கயவர்கள் அதிர்ச்சி செயல்..!