லிவிங் டுகெதர் காதலி கொலை.. 9 மாதமாக பிரிட்ஜில் சடலம்.. மின்சார துண்டிப்பால் வீசிய துர்நாற்றம்.!!
லிவிங் டுகெதர் காதலி கொலை.. 9 மாதமாக பிரிட்ஜில் சடலம்.. மின்சார துண்டிப்பால் வீசிய துர்நாற்றம்.!!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள தேவாஸ், விருத்தவன் காலனி பகுதியில் வசித்து வந்தவர் பிங்கி பிரஜாபதி. இவரின் லிவிங் டுகெதர் காதலர் சஞ்சய் படிதார். இவர்கள் இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக லிவிங் முறையில் வசித்து வந்துள்ளனர்.
இதனிடையே, கடந்த 2024 மார்ச் மாதத்தில், பிங்கி சஞ்சயிடம் தன்னை திருமணம் செய்யும்படி கூறி இருக்கிறார். இந்த விசயத்திற்கு சஞ்சய் மறுத்துள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
காதலி கொலை
வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த சஞ்சய், தனது நண்பர் வினய் என்பவருடன் சேர்ந்து பிங்கியை தாக்கி இருக்கிறார். இதில் பிங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வழக்கில் இருந்து தப்பிக்க சஞ்சய், வீட்டின் குளிர்சாதன பெட்டியில் பிங்கியின் உடலை 9 மாதமாக வைத்துள்ளார்.
இதையும் படிங்க: ரூ.5000 வரதட்சணைக்காக புதுமணப்பெண் அடித்தே கொலை; குடிகார மாப்பிள்ளை கொடூர செயல்.!
இதனிடையே, சமீபத்தில் அங்கு மின்சார பிரச்சனை ஏற்பட்ட நிலையில், குளிர்சாதன பெட்டியில் இருந்த குளிர் குறைந்து, அழுகிய உடலின் துர்நாற்றம் வீசி இருக்கிறது. இதனால் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, குளிர்சாதன பெட்டியில் பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. அவரின் உடல் ப்ரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு நடந்த விசாரணையில் உண்மை அம்பலமானது.
இதனையடுத்து சஞ்சய், வினய் ஆகியோரை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: மனைவி, மகள், 23 வயது இளம்பெண் என மூவர் கொடூர கொலை; காவலர் வெறிச்செயல்., பெங்களூரில் பயங்கரம்.!