மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்த 7ம் வகுப்பு மாணவர்; பதறவைக்கும் சம்பவம்.. உண்மையை மறைக்கும் பள்ளி நிர்வாகம்?
மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்த 7ம் வகுப்பு மாணவர்; பதறவைக்கும் சம்பவம்.. உண்மையை மறைக்கும் பள்ளி நிர்வாகம்?
பள்ளி மாணவர் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.
மத்தியபிரதேசம் மாநிலத்தில் உள்ள குவாலியர் மாவட்டம், போதாப்பூர் பகுதியில் சைதன்யா டெக்னோ பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மாணவர் ஒருவர் 7ம் வகுப்பு பயின்று வருகிறார். இவரின் வகுப்பறை இரண்டாவது தளத்தில் இருக்கிறது.
இதையும் படிங்க: கொலையாளியை கைது செய்ய உதவிய "ஈ"... துப்பு கிடைத்தது எப்படி?.. பரபரப்பு தகவல்.!
இதனிடையே, சம்பவத்தன்று மாணவர் வழக்கம்போல பள்ளிக்கு வருகை தந்த நிலையில், அவர் மூன்றாவது மாடிக்கு சென்று, அங்கிருந்து கீழே குதித்து இருக்கிறார். இந்த சம்பவத்தில் மாணவரின் முகம், கை-கால் பகுதிகளில் எலும்பு முறிவு உட்பட பலத்த காயம் ஏற்பட்டது.
மருத்துவமனையில் அனுமதி
இதனைக்கண்டு அதிர்ந்துபோன பள்ளி நிர்வாகம், உடனடியாக அவசர ஊர்தி மூலமாக மருத்துவமனையில் மாணவரை அனுமதி செய்தது. மேலும், மாணவரின் பெற்றோருக்கு தொடர்புகொண்டு, மாணவர் மயங்கி கீழே விழுந்துவிட்டதாகவும், மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
உண்மையை மறைக்க முயன்ற பள்ளி நிர்வாகம்?
பதறியடித்து குடும்பத்தினர் பள்ளிக்கு விரைந்தபோது மாணவரின் உடலில் படுகாயம் ஏற்பட்டுள்ளதை கண்டு அவர்கள் விவாதித்தபோது சரிவர பதில் இல்லை. இதனால் சிசிடிவி கேமிரா பதிவுகளை காண்பிக்க சொல்லியுள்ளனர், அதற்கும் பலன் இல்லை. இதனால் காவல் நிலையத்தில் உடனடியாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினர் விசாரணை
புகாரை ஏற்ற காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், இரண்டாவது மாடியில் வகுப்பறை கொண்ட மாணவர், மூன்றாவது மாடிக்கு சென்று கீழே குதித்தது தெரியவந்தது. இதனால் அவர் எதற்காக கீழே குதித்தார்? என்ன நடந்தது? என விசாரணை நடந்து வருகிறது.
இதையும் படிங்க: கணவரின் முதல் மனைவிக்கு 50 முறை சதக்., சதக்... துள்ளத்துடிக்க கதறி உயிரிழந்த இளம்பெண்.. பதறவைக்கும் கொடூரம்.!