நொடியில் களையிழந்த திருமண வைபோவம்.. மயங்கி சரிந்த மணமகனால் குடும்பத்தினர், உறவினர்கள் பரிதவிப்பு.!
நொடியில் களையிழந்த திருமண வைபோவம்.. மயங்கி சரிந்த மணமகனால் குடும்பத்தினர், உறவினர்கள் பரிதவிப்பு.!

வாழ்க்கை மிகக்குறுகியது என்பதை நொடியில் உணர்த்தும் வீடியோ ஒன்று மனதை ரணமாக்கும் வகையில் வெளியாகியுள்ளது.
திருமண பந்தத்தில் நுழைந்து புதிய வாழ்க்கையை தொடங்கிய வேண்டிய மணமகன், வரவேற்பு நிகழ்ச்சிக்கு தயாராகி, குதிரையில் இருந்தபோது மயங்கி சரிந்து உயிரிழந்த காணொளி வெளியாகியுள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சோப்பூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் பிரதீப் ஜாத். இவர் காங்கிரஸ் அரசியல்கட்சி பிரதிநிதி ஆவார்.
இதையும் படிங்க: புதுமணப்பெண்ணுக்கு சகோதரி வடிவில் காத்திருந்த பேரதிர்ச்சி.. மேடையில் நடந்த அசம்பாவிதம்.!
கொண்டாட்டம் நொடியில் பறிபோனது
சம்பவத்தன்று பிரதீபுக்கு திருமணம் நடக்க விறுவிறுப்புகளுடன் ஏற்பாடு நடைபெற்றது. உறவினர்கள் பலரும் அவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கொண்டாட்டத்தில் இருந்தனர்.
அப்போது, குதிரை மீது அமர்ந்து இருந்த பிரதீப், திடீரென மயங்கி சரிந்தார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அவரின் மரணம் உறுதி செய்யப்பட்டது.
இதுதொடர்பான பதறவைக்கும் காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
இதையும் படிங்க: கொதிக்கும் எண்ணெயில் விழுந்து 2 வயது சிறுவன் மரணம்; விளையாட்டு வினையான சோகம்.. சுப நிகழ்ச்சியில் துயரம்.!