வயோதிக தம்பதியை திசைதிருப்பி ரூ.4.5 இலட்சம் மதிப்பிலான நகை திருட்டு; அதிர்ச்சி வீடியோ.!!
வயோதிக தம்பதியை திசைதிருப்பி ரூ.4.5 இலட்சம் மதிப்பிலான நகை திருட்டு; அதிர்ச்சி வீடியோ.!!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஹவேலி, சேவாலவாடி பகுதியில் வசித்து வரும் முதிய தம்பதி, வங்கியில் தங்களுக்கு சொந்தமான ரூ.4.95 இலட்சம் மதிப்பிலான நகையை வாங்கிவிட்டு, தங்களின் வீட்டிற்கு திரும்பிக்கொண்டு இருந்தனர்.
அச்சமயம், தம்பதி அங்குள்ள கடை ஒன்றில் வடாபாவ் வாங்க முற்பட்ட நிலையில், மூதாட்டி வாகனத்திற்கு அருகே நின்றுகொண்டு இருந்தார். நகையை வாகனத்தின் முன்பக்கத்தில் வைத்துள்ளனர்.
மூதாட்டியின் திசையை திருப்பி அதிர்ச்சி செயல்
இதனிடையே, தம்பதிகளை நோட்டமிட்டவாறு வந்த இளைஞர் ஒருவர், மூதாட்டியின் திசையை திருப்பினார். அப்போது, காத்திருந்த வேறொரு இளைஞர், நகையை திருடிவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி சென்றார்.
இதையும் படிங்க: #BigBreaking: 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; நீதிகேட்ட போராட்டத்தில் கல்வீச்சு.. பதற்றம்.!
இந்த விஷயம் குறித்து முதிய தம்பதி காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை அதிகாரிகள் ஏற்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்த சிசிடிவி கேமிரா காட்சிகள் வெளியாகி இருக்கின்றன.
வங்கிகளில் இருந்து நகை மற்றும் பணத்தை பெற்று வீட்டிற்கு வருவோர், அதனை முதலில் வீட்டிற்கு கொண்டுவந்துவிட வேண்டும். நமது ஒரு நொடி செயலும், திருட்டை எதிர்நோக்கி காத்திருக்கும் நபர்களுக்கு வாய்ப்பை வழங்கிவிடும் என்பதை உணர வேண்டும்.
இதையும் படிங்க: 40 ரூபாய் உப்மா ரூ.120க்கு விற்பனை.. ஹோட்டலை விட Zomato-வில் 3 மடங்கு அதிக கட்டணம்.!!