பெற்றோர், மனைவி கண்முன் இளைஞர் அடித்துக்கொலை; முந்திச்செல்லும் தகராறில் ஆட்டோ ஓட்டுநர் கும்பல் கொடூர செயல்.!
பெற்றோர், மனைவி கண்முன் இளைஞர் அடித்துக்கொலை; முந்திச்செல்லும் தகராறில் ஆட்டோ ஓட்டுநர் கும்பல் கொடூர செயல்.!
தனது பெற்றோர், மனைவி கண்முன்னே இளைஞர் ஒருவர் கொடூரமாக அடித்தே கொலை செய்யப்பட்ட சம்பவம் பதறவைத்துள்ளது. கும்பலாக சேர்ந்து இளைஞரை தாக்க, மகனை காப்பாற்ற தாய் மகனின் மீது படுத்துக்கொண்ட பதறவைக்கும் சம்பவத்தின் வீடியோ வெளியாகி இருக்கிறது. இப்படியும் ஒரு கொடூர உலகிலா நாம் வாழுகிறோம் என்ற கேள்வியை எழுப்பும் வகையில் நடந்த துயரத்தை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள உள்ள மும்பை, மலாட் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ் மைனே (வயது 34). இவர் சம்பவத்தன்று தனது மனைவி, பெற்றோருடன் இரண்டு இருசக்கர வாகனத்தில் தனித்தனியே பயணம் செய்துகொண்டு இருந்தனர். அச்சமயம் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் திடீரென குறுக்கே வந்து பின் சென்றதாக தெரியவருகிறது.
இதையும் படிங்க: #Breaking: பள்ளி சீருடையில் அக்கா, தம்பி சரமாரியாக வெட்டிக்கொலை.. சேலத்தில் படுபயங்கரம்..!
ஆட்டோ ஓட்டுநர் - இருசக்கர வாகன ஓட்டி வாக்குவாதம்
இதனால் ஆகாஷ் மைனே ஆட்டோ ஓட்டுனரை கண்டித்துள்ளார். இந்த விஷயம் குறித்து இருதரப்பு வாக்குவாதம் உண்டாகியுள்ளது. இருவரும் சாலையோரம் வாகனத்தை நிறுத்தி வாக்குவாதம் செய்துள்ளனர். ஒருகட்டத்தில் ஆட்டோ ஓட்டுனருக்கு ஆதரவாக பிற ஆட்டோ ஓட்டுனர்கள் என 12 முதல் 15 பேர் கும்பல் அங்கு குவிந்துள்ளது.
பெற்றோர் கண்முன் கொலை
ஆகாஷின் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தனது மகனை கும்பல் தாக்குவதை கண்டு அதிர்ந்துபோன அவரின் தாய், மகனை காப்பாற்றும் பொருட்டு அவரின் மீது படுத்துக்கொண்டார். தந்தை கும்பலை சமாதானப்படுத்த முயற்சித்தது. இவர்களின் தாக்குதலில் கருத்தரித்து இருந்த ஆகாஷின் மனைவி, கருக்கலைப்பு நிலைக்கு தள்ளப்பட்டார். இந்த கும்பல் ஆகாஷை மட்டுமல்லாது அவர்களின் குடும்பத்தினர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது.
கருகலைந்தது
இந்த சம்பவத்தில் ஆகாஷின் தந்தைக்கு உடலில் காயம், கால் முறிவு, கண்களில் காயம் போன்றவை ஏற்பட்டுள்ளது. ஆகாஷின் மனைவி கரு கலைந்துவிட்டது. இறுதியில் ஆகாஷும் கொலை செய்யப்பட்டார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், ஆகாஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. உயிரிழந்த ஆகாஷ் மராட்டிய நவநிர்மா சேனா என்ற அமைப்பின் தொண்டராகவும் இருந்து வந்துள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள டிண்டோஷி காவல்துறையினர், 9 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே, ஆகாஷை காப்பாற்ற குடும்பத்தினர் நடத்திய பாசப்போராட்டம் குறித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
இளகிய மனம் கொண்டோர் விடியோவை பார்க்க வேண்டாம்..
இதையும் படிங்க: கொடூரத்தின் உச்சம்... பலாத்காரம் செய்யப்பட்ட 8 வயது சிறுமி.!! ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை.!!