#Breaking: 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை., பள்ளி, மதுபானக்கடை சூறையாடல்.. புதுச்சேரியில் பதற்றம், சாலை மறியல்.!
#Breaking: 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை., பள்ளி, மதுபானக்கடை சூறையாடல்.. புதுச்சேரியில் பதற்றம், சாலை மறியல்.!

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தவளக்குப்பம் பகுதியில், செயின்ட் ஜோசப் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு மாணவிக்கு, 12 ம் வகுப்பு வேதியியல் துறை ஆசிரியராக பணியாற்றி வரும் சாரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த விஷயம் குறித்து பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் பலனில்லாத நிலையில், பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆத்திரமடைந்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே மணிகண்டனின் மீது 12 ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தபோதிலும், அதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
பொதுமக்கள் போராட்டம்
இதனால் இன்று 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்ட நிலையில், பள்ளிக்குள் இருந்த ஆசிரியர் மணிகண்டனை பிடித்து அடித்து நொறுக்கினர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் ஆசிரியரை மீட்டுச் சென்றபோது, பொதுமக்கள் சாலையில் திரண்டு மறியல் செய்தனர். மேலும், பள்ளியையும் சூறையாடினர்.
இதையும் படிங்க: சனீஸ்வர பகவானுக்கே விபூதி அடித்த பூசாரி.. திருநள்ளாறு கோவில் பெயரில் அதிர்ச்சி செயல்..!
பள்ளியின் உரிமையாளர் ஆசிரியர் மணிகண்டனுக்கு ஆதரவாக இருந்ததால், அவரின் மதுபான பாரும் அடித்து நொறுக்கப்பட்டது. இதனால் புதுச்சேரியில் பதற்றமான நிலை உருவாகி இருக்கும் சூழலில், அதிகாரிகள் மக்களை சமாதானம் செய்ய முற்பட்டு, இறுதியில் கைது நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: #Breaking: புதுச்சேரியில் பேரதிர்ச்சி.. ரௌடிகள் மூவர் வெட்டிப்படுகொலை..!