அண்ணா பல்கலை., மிஞ்சும் பாண்டிச்சேரி கொடூரம்.. கல்லூரி வளாகத்தில் மாணவி 3 பேர் கும்பலால் பலாத்கார முயற்சி.!
அண்ணா பல்கலை., மிஞ்சும் பாண்டிச்சேரி கொடூரம்.. கல்லூரி வளாகத்தில் மாணவி 3 பேர் கும்பலால் பலாத்கார முயற்சி.!
புதுச்சேரி மாநிலம் காலப்பட்டு பகுதியில், தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஒன்று செயல்படுகிறது. இந்த பல்கலை.,யில் இளநிலை, முதுநிலை பிரிவுகளில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகிறார்கள்.
வடமாநிலத்தை சேர்ந்த மாணவி ஒருவர், பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்தவாறு முதல் ஆண்டு இளநிலை பொறியியல் பட்டம் பயின்று வருகிறார்.
விடுதி வளாகத்தில் பலாத்கார முயற்சி
கடந்த ஜனவரி 12 அன்று விடுமுறை நாளில், பெண் தனது காதலருடன் கல்லூரி வளாகத்தில் உள்ள வேதியியல் பிரிவு கட்டிடத்தின் தனிமை பகுதியில் சந்தித்தார்.
இதையும் படிங்க: ஆன்லைன் டிரேடிங்கில் பணம் இழப்பு; 29 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை.!
அச்சமயம் அங்கு வந்த 3 பேர் கும்பல் காதல் ஜோடியிடம் தகராறு செய்து, தட்டிக்கேட்ட காதலனை தாக்கி இருக்கிறது. பின் மாணவியை மூவராக சேர்ந்து கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்டுள்ளனர்.
மாணவி கூச்சலிட்ட காரணத்தால், கும்பல் அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. இதனால் காயமடைந்த மாணவி, அவரின் காதலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பின் விடுதிக்கு வந்துள்ளனர். இதுதொடர்பாக புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சென்னை அண்ணா பல்கலை., வளாகத்தில் காதலருடன் பேசிய மாணவியை, ஞானசேகரன் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது மாணவி 3 பேர் கும்பலால் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: #Justin: பொங்கல் பரிசாக குடும்ப அட்டைகளுக்கு ரூ.750/- புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு.!