பட்டப்பகலில் பயங்கரம்.. துணிக்கடை உரிமையாளர் சுட்டுக்கொலை.!
பட்டப்பகலில் பயங்கரம்.. துணிக்கடை உரிமையாளர் சுட்டுக்கொலை.!
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தர்ஸ, டாலிவெல் சவுக் பகுதியில் நகைக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. சம்பவத்தன்று கடைக்கு வந்த நபர் ஒருவர், நகைக்கடை உரிமையாளர் சிமர்பால் சிங்கை சுட்டுக்கொலை செய்தார்.
இளைஞர் சுட்டுக்கொலை
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர், விரைந்து சென்று சிமர்பாலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விசாரணையில், அவரை சுட்டுக்கொலை செய்தது ஜெஸ்த்தீப் சிங் சான் என்பது தெரியவந்தது.
இதையும் படிங்க: காலாவதியான குளுக்கோஸ் செலுத்தப்பட்டதால் சோகம்; கர்ப்பிணி பெண் பலி.!
இருவருக்கும் இடையே தொழில் ரீதியாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த ஆத்திரத்தில் சம்பவத்தன்று சிமர்பாலின் கடைக்குச் சென்ற ஜெஸ்த்தீப், சிமர்பாலை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் பட்டப்பகலில் நடந்துள்ளது.
இதையும் படிங்க: சிறுமியின் மீது விழுந்த இளைஞர்.. தலையில் காயமடைந்து, மூக்கு உடைந்து பரிதாப மரணம்.!