15 மாதத்தில் 83 மர்ம மரணங்கள்.. அரசுப்பள்ளி விடுதியில் பழங்குடியின மாணவர்களுக்கு நடப்பது என்ன? அதிரவைக்கும் தகவல்.!
15 மாதத்தில் 83 மர்ம மரணங்கள்.. அரசுப்பள்ளி விடுதியில் பழங்குடியின மாணவர்களுக்கு நடப்பது என்ன? அதிரவைக்கும் தகவல்.!

கடந்த 15 மாதத்தில் மட்டும் மொத்தமாக 83 மாணவர்களின் மர்ம மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக தெலுங்கானாவில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள அலிதாபாத் மாவட்டம், லச்சோடா மண்டலத்தில், பழங்குடியின பெண்கள் பயின்று வரும் அரசுப்பள்ளி விடுதியுடன் செயல்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: டிவி ரிமோட் சண்டையில் துயரம்; பெண் ஐடி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை.!
இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான மாணவிகள் தங்கியிருந்து பயின்று வருகின்றனர். இதனிடையே, இங்கு சர்ச்சைக்குரிய மர்ம மரணங்களும் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
உரிய பராமரிப்பின்மை மற்றும் பாதுகாப்பின்மை காரணமாக மர்ம மரணங்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் கூட ஒன்பதாம் வகுப்பு பயின்று வரும் 14 வயது மாணவி மரணம் அடைந்தார்.
சிறுமி மரணம்
அவரிமரணம் மர்மமாகவே இருக்கும் நிலையில், இவ்வாறான குருகுல பள்ளிகளில் கடந்த 15 மாதங்களில் மட்டும் 83 மாணாக்கர்கள் மர்மமான வகையில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விஷயம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், உயிரிழந்தக 83 மாணவர்களின் மரணத்தில் உள்ள மர்மம் குறித்த தீவிர விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திருநங்கையுடன் காதல்.. திருமணம் கைகூடுவதற்குள் இளைஞர் விபரீதம்.!