தறிகெட்ட வேகம், போதை.. கார் நீரில் மூழ்கி 5 இளைஞர்கள் மரணம்.!
தறிகெட்ட வேகம், போதை.. கார் நீரில் மூழ்கி 5 இளைஞர்கள் மரணம்.!
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள யடத்ரி புவன்கிரி மாவட்டம், ஜலால்பூர் பகுதியில் ஏரி உள்ளது. இன்று அதிகாலை 5 மணியளவில், மிதமிஞ்சிய போதையில் 5 இளைஞர்கள் கும்பல் காரில் பயணம் செய்தது.
அதிவேகத்தில் காரில் பறந்த கும்பலின் வாகனம், ஒருகட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்து ஜலால்பூர் கிராமத்தின் ஏரியில் பாய்ந்து மூழ்கியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 5 பேர், நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஒருவருக்கு மட்டுமே அதிஷ்டம்
ஒருவர் மட்டும் காரின் கண்ணாடியை உடைத்து வெளியேற உயிர்தப்பி வந்தார். அவர் கொடுத்த தகவலின் பேரில் காவல்துறையினர், உள்ளூர் மக்கள் விரைந்து வந்து காரை மீட்டனர்.
இதையும் படிங்க: வளைவுப்பகுதியில் கவனம்.. லாரி சக்கரத்தில் சிக்கி தீப்பிடித்த டூவீலர்.. தப்பிய உயிர்.. பதறவைக்கும் வீடியோ.!
அப்போது, அவருடன் பயணம் செய்த ஐவர் உயிரிழந்தது அம்பலமானது. இளைஞர்களின் போதை, விதியை மீறிய செயல் உயிரை பறித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த விஷயம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
இதையும் படிங்க: படிக்கட்டு பயணத்தால் ஊசலாடும் உயிர்; 16 வயது பள்ளி மாணவர் படுகாயம்.. பதறவைக்கும் காட்சிகள்.!