7 மாத கர்ப்பிணியின் வயிற்றில் அமர்ந்து கொடூர கொலை.. சிசு வெளியேறி பெண் துள்ளத்துடிக்க மரணம்.!
7 மாத கர்ப்பிணியின் வயிற்றில் அமர்ந்து கொடூர கொலை.. சிசு வெளியேறி பெண் துள்ளத்துடிக்க மரணம்.!

கர்ப்பிணி மானைவியை கணவன் ஈவு-இரக்கமின்றி கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிரவைத்துள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத், காசிக்குடா பகுதியில் வசித்து வருபவர் சத்ய நாராயணா (வயது 21). இவரின் மனைவி சினேகா (வயது 21). தம்பதிகளுக்கு திருமணம் முடிந்து சில ஆண்டுகளே ஆகிறது.
இதனிடையே, போதைக்கு அடிமையான நாராயணா, எப்போதும் மனைவியிடம் தகராறு செய்வதையும், தாக்குவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார். இதனிடையே, தற்போது சினேகா 7 மாத கர்ப்பமாக இருக்கிறார்.
இதையும் படிங்க: #Breaking: ஒரு நிமிடம் பொறுத்திருக்கலாமே? அரசுப்பேருந்து சக்கரத்தில் சிக்கி பெண் துள்ளத்துடிக்க மரணம்... பதறவைக்கும் காட்சிகள்.!
முகத்தை அழுத்தி கொடூர கொலை
இந்நிலையில், நேற்று தனது மனைவியை கட்டாயப்படுத்தி தாக்கி மதுபானம் அருந்த வைத்த சத்ய நாராயணா, மனைவியின் வயிற்றில் அமர்ந்து, தலையணையால் முகத்தை அழுத்தி கொடூர கொலை செய்துள்ளார்.
இந்த சம்பவத்தில் கற்பினின் வயிற்றில் இருந்து சிசு வெளியேறி குழந்தையும் உயிரிழந்த நிலையில், சினேகாவும் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவர், குழந்தை தனக்கு பிறந்திருக்காது என்ற எண்ணத்தில் கொலை செய்ததாகவும் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: வெந்நீரில் தவறி விழுந்து 4 வயது சிறுவன் பலி; குளிக்கும்போது நேர்ந்த சோகம்.!