×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#BigNews: தொண்டையில் முட்டை சிக்கி முதியவர் நொடியில் பலி; பசி மயக்கம் அவசரம்., விதியை முடித்த சோகம்.!

தொண்டையில் முட்டை சிக்கி முதியவர் பலி; பசி மயக்க அவசரம்., விதியை முடித்த சோகம்.!

Advertisement

 

பசியின் பிடியால் முதியவர் அவசர அவசரமாக முட்டையை சாப்பிட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

 

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நாகர் கர்னூல் மாவட்டம், லிங்காலா, பிஜினப்பள்ளி, வட்டமோன் கிராமத்தில் வசித்து வருபவர் திருப்பத்தையா (வயது 48). 

இதையும் படிங்க: நாயை துரத்திவந்து சோகம்; ஜன்னல் துவாரத்தில் பாய்ந்து இளைஞர் பரிதாப பலி.. நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்.!

இவர் சொந்த வேலையாக லிங்காளா கிராமத்திற்கு வந்துள்ளார். காலையில் உணவு சாப்பிடாத காரணத்தால், வேலையை முடித்துவிட்டு வரும்போது அதிகம் பசி எடுத்துள்ளது. 

தள்ளுவண்டி முட்டை

இதனால் அங்குள்ள சென்னாம்பள்ளி சதுக்கம் பகுதியில், தள்ளுவண்டி ஒன்றில் விற்பனை செய்யப்பட்ட முட்டை ஒன்றை வாங்கி சாப்பிட்டு இருக்கிறார். 

பசி மயக்கத்தில் அவர் முட்டையை முழுவதுமாக வாயில் திணித்து சாப்பிட முற்பட்டதாக தெரியவருகிறது. இதனால் முட்டை தொண்டையில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு முதியவர் மயங்கி விழுந்துள்ளார். 

தொண்டையில் சிக்கி மரணம்

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்தவர்கள், அவரை காப்பாற்ற முற்படுவதற்குள் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த லிங்காளா காவல்துறையினர், விரைந்து வந்து திருபத்தையாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த விஷயம் குறித்து விசாரணையும் நடந்து வருகிறது. முதியவர் சாப்பிட்ட முட்டை, அவரின் தொண்டையில் சிக்கியதால் உயிரிழப்பு நடந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. 

அவசரத்தில் உணவை சாப்பிட்டு, அரக்க பறக்க ஓடுவோருக்கு இந்த சம்பவம் ஓர் எச்சரிக்கைப்பாடம். 

 

இதையும் படிங்க: அதிவேகத்தில் சோகம்; 4 சிறார்கள் உட்பட 7 பேர் பரிதாப பலி.. சாலையோர மரத்தில் கார் மோதி பயங்கரம்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Telangana #Egg #death
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story