இளைஞர்களின் கொண்டாட்டத்தால் சோகம்; 55 வயது நபர் மாரடைப்பால் பலி.!
இளைஞர்களின் கொண்டாட்டத்தால் சோகம்; 55 வயது நபர் மாரடைப்பால் பலி.!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள உன்னாவ் மாவட்டம், கோட்வாலி சதார் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் ஷரீப் (வயது 55).
சம்பவத்தன்று இவர் சீடா மாதா கோவில் பகுதியில் இருந்தார். அப்போது, அங்கு வந்த இளைஞர்கள் சிலர், ஷரீப் மீது ஹோலி பண்டிகைக்காக வண்ணங்களை தூவி கட்டாயப்படுத்தி பிரச்சனை செய்துள்ளது.
இதையும் படிங்க: மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரின் ஆணுறுப்பு நறுக்... கணவன், சகோதரர்கள் பகீர் செயல்.!
இதனால் திடீர் மூச்சுத்திணறல், மயக்க நிலையை எதிர்கொண்டவர் சரிந்து விழுந்தார். இதனால் உடனடியாக மீட்கப்பட்ட அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார்.
அங்கு அவரின் மாரடைப்பு மரணம் உறுதி செய்யப்பட்டது. இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த கோடாலி சதர் காவல்துறையினர், ஷரீப் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததை உறுதி செய்தனர்.
இதையும் படிங்க: அந்த சாதிக்காரனோட திருமணமா? 23 வயது இளம்பெண் ஆணவப்படுகொலை.. தந்தை-மகன் கைது.!