திருமணம் முடிந்த 13 நாட்களில் புதுமணப்பெண் கொலை; நெஞ்சை நடுங்கவைக்கும் காரணம்.. இப்படியும் இழிபிறவிகள்?
திருமணம் முடிந்த 13 நாட்களில் புதுமணப்பெண் கொலை; நெஞ்சை நடுங்கவைக்கும் காரணம்.. இப்படியும் இழிபிறவிகள்?
வரதட்சணைக்காக திருமணம் முடிந்த 2 வாரத்திற்குள் கணவர் மனைவியை கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.
உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரோசாபாத் பகுதியில் வசித்து வருபவர் பிரியங்கா. ஆக்ரா, தன்கன்ச் பகுதியைச் சேர்ந்தவர் ரோஹித். தம்பதிகள் இருவருக்கும் கடந்த 13 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. திருமணம் ஆடம்பரமாக நடைபெற்றதாக தெரியவருகிறது.
பிரியங்கா மரணம்
இதனிடையே, திருமணம் முடிந்தபின்னர், பிரியங்கா தனது கணவர் மற்றும் அவரின் குடும்பத்தாருடன் ஆக்ராவில் வசித்து வந்துள்ளார். திருமணம் முடிந்து இருவருக்கும் 13 நாட்களே ஆகும் நிலையில், இன்று பிரியங்காவின் குடும்பத்தினருக்கு தொடர்புகொண்ட ரோஹித் மற்றும் அவரின் உறவினர்கள், பிரியங்கா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: "வா ஜாலியா இருக்கலாம்..." கானகிரீட் ஸ்லாபல் அடித்து இளம்பெண் கொலை.!! 19 வயது இளைஞர் கொடூர செயல்.!!
வரதட்சணைக்காக கொலை
மகளுக்கு என்ன ஆனது என்பது தெரியாமல் பதறிப்போன பெற்றோர், ஆக்ராவுக்கு சென்று பார்த்தபோது அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனால் அதிர்ந்துபோன பெற்றோர், பிரியங்கா வரதட்சணை சார்ந்த விஷயத்தால் ரோஹித் மற்றும் அவரின் குடும்பத்தாரால் கொலை செய்திருப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
காவல்துறை விசாரணை
மேலும், இந்த விஷயம் தொடர்பாக காவல் நிலையத்தில் அவர்கள் புகார் அளித்துள்ள நிலையில், இதன்பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: "அவன்கூட வேண்டாம் னு சொன்னா கேட்கலை" - மனைவியை உயிருடன் எரித்துக்கொன்ற கணவர்; பரபரப்பு வாக்குமூலம்.!