14 வயது சிறுவனுக்கு நேர்ந்த சோகம்.. மாரடைப்பால் நண்பர்கள் கண்முன் பரிதாப மரணம்..!
14 வயது சிறுவனுக்கு நேர்ந்த சோகம்.. மாரடைப்பால் நண்பர்கள் கண்முன் பரிதாப மரணம்..!
சிறுவன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அலிகார்க் மாவட்டம், சிரவுளி கிராமத்தில் வசித்து வரும் சிறுவன் மோகித் சௌதாரி (வயது 14). சிறுவன் அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் பயின்று வருகிறார்.
சம்பவத்தன்று சிறுவன் பள்ளியில் நடைபெறும் விளையாட்டுப்போட்டிக்காக தயாராகிக்கொண்டு இருந்தார். நண்பர்களுடன் அவர் 2 முறை மைதானத்தை சுற்றிலும் ஓடியதாக தெரிய வருகிறது.
இதையும் படிங்க: திருமணத்தில் நண்பருக்கு பரிசளித்த கையுடன் மயங்கி விழுந்து மாரடைப்பு மரணம்.. பதறவைக்கும் சோகம்.!
மயங்கி விழுந்து மரணம்
அப்போது, சிறுவன் திடீரென மயங்கி சரிந்தார். அவரை மீட்ட நண்பர்கள், ஆசிரியர்கள் உதவியுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், மோகித்தின் உயிர் பிரிந்துவிட்டதை உறுதி செய்தனர்.
இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். எதிர்வரும் வாரத்தில் நடைபெறும் விளையாட்டுப்போட்டிக்காக சிறுவன் தயாராகி வந்தபோது இந்த சோகம் நடந்துள்ளது.
முதற்கட்ட தகவலின்படி சிறுவன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: திருமண நாள் நடனத்தில் சோகம்.. மாரடைப்பு ஏற்பட்டு மணமகன் பரிதாப பலி., நெஞ்சை உலுக்கும் இறுதி காட்சிகள்.!