Watch: விடுமுறையில் சொந்த ஊருக்கு புறப்பட்டு, சடலமான காவலர்; இரயிலில் ஏறும்போது செல்போனில் பேசி விபரீதம்.!
Watch: விடுமுறையில் சொந்த ஊருக்கு புறப்பட்டு, சடலமான காவலர்; இரயிலில் ஏறும்போது செல்போனில் பேசி விபரீதம்.!
செல்போனில் பேசியபடி ஓடும் இரயிலில் ஏற முற்பட்ட காவலர், இரயில் - நடைமேடை சிக்கி துள்ளத்துடிக்க உயிரிழந்த சோகம் உ.பி-யில் நடந்துள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அலிகார்க் 104 வது பட்டாலியனில் வேலை துணை காவல் ஆய்வாளராக வேலை பார்த்து வருபவர் பின்த் ராய். இவரின் சொந்த ஊர் பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னா மாவட்டம் ஆகும். தற்போது வேலை நிமித்தமாக அலிகார்க்கில் தங்கி இருக்கிறார்.
இதனிடையே, ராய் விடுமுறை எடுத்து சொந்த ஊர் செல்ல திட்டமிட்டார். சம்பவத்தன்று காமாக்யா எக்ஸ்பிரஸ் விரைவு இரயிலில், ஏசி வகுப்பில் முன்பதிவு செய்திருந்தவர் இரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது, இரயிலில் ஏற முற்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: சிக்ஸர் அடித்த வேகத்தில் மயங்கி சரிந்த வீரர்; கிரிக்கெட் விளையாட்டின்போது நடந்த சோகம்.!
கால் இடறி சோகம்
சில நொடிகள் அவர் தாமதமாக வருகை தந்ததால், இரயில் புறப்பட்டு சென்றது. லேசான வேகத்தில் நகர்ந்த இரயிலில், செல்போனில் பேசியபடி ராய் ஏற முற்பட்டார். அச்சமயம் கால் இடறி இரயில் - நடைமேடை இடையே சிக்கிக்கொண்டார். அவர் முதுகுப்பை பெரிதாக அணிந்திருந்தார்.
இதனால் சில முறை நடைமேடை - இரயில் இடையே சிக்கி உருண்டு தண்டவாளத்தில் விழுந்தார். இதனைக்கண்டு அதிர்ந்துபோன பயணிகள் அபாயசங்கிலியை பிடித்து இழுத்து இரயிலை நிறுத்தினர். இறுதியில் படுகாயமடைந்தவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சையில் இருந்தவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் மரணம் தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். மேலும், ராய் விபத்தில் சிக்கிய பதறவைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: குழந்தையின்மை.. கோழிகுஞ்சியை முழுங்கிய ஆண்.. சற்று நேரத்தில் நடந்த விசித்திரத்தால் அதிர்ச்சி.!