×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

150 ஏக்கர் நில மோசடியை அம்பலப்படுத்திய இளைஞர் மர்ம மரணம்.. மீட்கப்பட்ட மண்டை ஓடு.!

150 ஏக்கர் நில மோசடியை அம்பலப்படுத்திய இளைஞர் மர்ம மரணம்.. மீட்கப்பட்ட மண்டை ஓடு.!

Advertisement

நில மோசடி விவகாரத்தை அம்பலப்படுத்திய இளைஞர் 18 நாட்களமாக மாயமான நிலையில், அவரின் மண்டை ஓடு மீட்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ப்ரெய்லி, பரித்புர் பகுதியில் வசித்து வருபவர் மனிஷ் சந்த் கைஷயுப். இவர் கடந்த 18 நாட்களுக்கு முன்பு வேலைக்கு சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், மனிஷை தேடி வந்தனர். இதனிடையே, 18 நாட்களுக்கு பின் கால்வாய் ஒன்றில் இருந்து எலும்புக்கூடு மீட்கப்பட்டது. அதனை ஆய்வு செய்தபோது, மண்டை ஓடு மனிஷுடையது என்பது அம்பலமானது.

இதையும் படிங்க: திருமணமான 2 ஆண்டுக்குள் மனைவி டார்ச்சர்.. தலைமை காவலர் இரயில் முன் பாய்ந்து தற்கொலை.!

நிலத்தகராறில் கொலை?

இதனால் மனிஷை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்தனர்? என விசாரணை நடந்து வருகிறது. கொலை செய்யப்பட்ட மனிஷ், உள்ளூரில் பிரபலமான நபர் ஒருவர், 150 ஏக்கர் நிலத்தை அபகரித்து வைத்திருந்த விஷயத்தை வெளிக்கொணர்ந்து இருக்கிறார். 

லெஃபால் பகுதியில் 150 ஏக்கர் நிலம் அபகரிக்கப்பட்டது தொடர்பான தகவலை திரட்டி, அதனை வெளி உலகுக்கு அம்பலப்படுத்திய நிலையில், அவர் மர்ம மரணம் அடைந்துள்ளார். இதனால் நிலம் தொடர்பான விவகாரத்தில் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: தேனிலவு முடித்த தம்பதிக்கு வழியில் காத்திருந்த எமன்; உறக்கத்தால் துள்ளத்துடிக்க பறிபோன 4 உயிர்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#death #Youth Mystery Death #Lekhpal #Uttar pradesh #உத்திர பிரதேசம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story