வயலுக்குள் கவிழ்ந்த பெட்ரோல் லாரி; விபரீதம் புரியாமல் பெட்ரோலை பிடிக்க முண்டியடித்த மக்கள்.!
வயலுக்குள் கவிழ்ந்த பெட்ரோல் லாரி; விபரீதம் புரியாமல் பெட்ரோலை பிடிக்க முண்டியடித்த மக்கள்.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள சந்தருளி பகுதியில், பெட்ரோல் ஏற்றுக்கொண்ட லாரி ஒன்று பயணம் செய்துகொண்டு இருந்தது. ஓட்டுநர் மற்றும் கிளீனர் லாரியில் இருந்தனர்.
லாரி சாலையோரம் சென்றபோது, எதிர்பாராத விதமாக பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. விவசாய நிலத்திற்குள் லாரி கவிழ்ந்து விபத்திற்குள்ளானதால், நல்வாய்ப்பாக பெரிய உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
இதையும் படிங்க: துயரமே வாழ்க்கையின் முடிவாக அமைந்ததால் சோகம்.. 28 வயது இளம்பெண் விபத்தில் பலி.. குடிகாரனால் நடந்த துயரம்.!
ஆனால், லாரி கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில், லாரியில் இருந்த பெட்ரோல் சிறிது-சிறிதாக வயல்வெளிக்குள் வெளியேற தொடங்கியது. இந்த தகவலை அறிந்து வந்த மக்கள், டின்களில் பெட்ரோலை பிடித்துச் செல்லத் தொடங்கினர்.
நல்வாய்ப்பாக ஓட்டுநர், கிளீனர் ஆகியோர் வெளியே குதித்து உயிர்தப்பினர். எரிபொருளின் விபரீதம் தெரியாமல் மக்கள் பெட்ரோல் பிடிக்க முண்டியடித்த காணொளி வெளியாகி வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: பிரசவத்திற்கு ரூ.4 ஆயிரம் கேட்ட ஊழியர்கள்; குழந்தையை ரூ.20 ஆயிரத்திற்கு விற்பனை செய்து பணம் கொடுத்த தந்தை.!