4 வயது சிறுவன் மூச்சுத்திணறி பலி., சுவிங்கம்தானே என அலட்சியமா? பெற்றோர்களே கவனம்.!
4 வயது சிறுவன் மூச்சுத்திணறி பலி., சுவிங்கம்தானே என அலட்சியமா? பெற்றோர்களே கவனம்.!
குழந்தைகள் ஆசையாக கேட்கிறார்களே, அடம்பிடித்து கேட்கிறார்களே என சுவிங்கம் வாங்கிக்கொடுக்கும் பெற்றோர், உறவினர்களுக்கு இந்த செய்தி ஓர் எச்சரிக்கைப்பாடம்.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூர் மாவட்டம், பார்ரா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், 4 வயதுடைய சிறுவன் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். கடந்த நவம்பர் 3 அன்று, சிறுவனுக்கு சுவிங்கம் சார்ந்த மிட்டாய் வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பெண்ணிடம் அந்தரங்க உறுப்பை காண்பித்து அதிர்ச்சி தந்த காங்கிரஸ் பிரமுகர்; பகீர் சம்பவம்.!
மூச்சுத்திணறல்
சிறுவன் மிட்டாயை சாப்பிட்டுக்கொண்டு இருக்கும்போது, அது தொண்டையில் சிக்கிக்கொண்டதாக தெரியவருகிறது. குழந்தை மிட்டாய் சாப்பிட்டு மூச்சுத்திணறலை எதிர்கொள்வதை கண்டு அதிர்ச்சியடைந்த தாய், மகனுக்கு குடிக்க தண்ணீர் கொடுத்துள்ளார்.
மருத்துவர்கள் இல்லாமல் சோகம்
எனினும், சிறுவனின் தொண்டையில் சிக்கிக்கொண்ட மிட்டாய் மூச்சுத்திணறலை அதிகப்படுத்த, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதி செய்தபோது, சிறுவனின் மரணம் உறுதி செய்யப்பட்டது. மருத்துவர்களும் தீபாவளி விடுப்பில் இருந்ததால், 4 மருத்துவமனைக்கு சென்றும் பலனில்லாது இறுதியில் சிறுவனின் மரணம் ஏற்பட்டுள்ளது.
மூன்றரை மணிநேரம் போராடி பறிபோன உயிர்
சிறுவனின் மரணம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. சுமார் மூன்றரை மணிநேர துயரத்திற்கு பின் சிறுவன் உயிர் பிரிந்ததாக தெரியவருகிறது.
இதையும் படிங்க: பத்திரிகையாளர்களை நிர்வாணப்படுத்தி, சிறுநீர் குடிக்க வைத்த பாஜக பிரமுகர்.. ஊழலை எதிர்த்ததால் பகீர்.!