திருமணமான 6 மாதத்தில், புதுமணத்தம்பதியின் உயிரை பறித்த எமன்; கண்ணீரில் உறவினரால்.!
திருமணமான 6 மாதத்தில், புதுமணத்தம்பதியின் உயிரை பறித்த எமன்; கண்ணீரில் உறவினரால்.!

கருத்து வேறுபாடு காரணமாக தம்பதி ஒரே வீட்டில் வெவ்வேறு அறையில் தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள குஷிநகர் மாவட்டம், சாப்ரா பகுதியில் வசித்து வருபவர் கிஷோர். இவரின் மகன் அஜித் குமார் (25). இவருக்கு திருமணம் முடிந்து சங்கீதா தேவி என்ற 22 வயது மனைவி இருக்கிறார்.
இதையும் படிங்க: 11 வயது சிறுமி சொந்த தந்தையால் பலாத்காரம்; நெஞ்சை பதறவைக்கும் தகவல்.!
தம்பதிகள் இருவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் தான் திருமணம் நடைபெற்று முடிந்தது. இதனிடையே, திருமணமானதில் இருந்து தம்பதிகளிடையே குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது.
தம்பதி தற்கொலை
இந்நிலையில், நேற்றும் இவர்களிடையே தகராறு உண்டாக, ருக்கட்டத்தில் இருவரும் தனித்தனியே வீட்டில் இருக்கும் இரண்டு அறைகளில் ஒருவருக்கொருவர் தெரியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர்.
நீண்ட நேரம் வீட்டின் கதவு திறந்திருந்த நிலையில், அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது விபரம் தெரியவந்தது. பின் தகவல் அறிந்த காவல் துறையினர், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். புதிய வாழ்க்கையை தொடங்கிய தம்பதிகளின் மரணத்தை அறிந்து உறவினர்கள் கண்ணீர் சோகத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர்.
இதையும் படிங்க: 5 வயது சிறுமி உடலை பல பாகமாக துண்டித்து கொடூர கொலை; தந்தை வெறிச்செயல்.. அதிரவைக்கும் காரணம்.!