பூச்சிக்கொல்லி தெளித்து, கைகளை கழுவாமல் உணவு சாப்பிட்டவர் மரணம்; 27 வயது இளம் விவசாயி பரிதாப பலி.!
பூச்சிக்கொல்லி தெளித்து, கைகளை கழுவாமல் உணவு சாப்பாடு; 27 வயது இளம் விவசாய தொழிலாளி பரிதாப பலி.!

வயலுக்கு பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தவர், கைகளை கழுவ மறுத்த காரணத்தால் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மதுரா பகுதியில் வசித்து வரும் 27 வயது இளைஞர், சம்பவத்தன்று தனது வயலுக்கு பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து இருக்கிறார். பின் இரவு நேர உணவு சாப்பிட்டுள்ளார்.
பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தவர் சரிவர கைகளை சுத்தம் செய்யாமல், அப்படியே உணவை சாப்பிட்டதாக தெரியவருகிறது. இதனால் உணவு சாப்பிட்ட பின்னர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டவர், மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: கலிகாலம்.. ஆட்டை அறைக்குள் தூக்கிச்சென்று பலாத்காரம்.. முதியவர் அதிர்ச்சி செயல்.!
உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் சோகம்
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், உயிரிழந்த இளைஞர் கன்னையா (வயது 27) என்பதும், அவர் கைகளை கழுவ மறுத்து இரவு உணவை சாப்பிட்டதாகவும், பலமுறை வற்புறுத்தியும் கேட்காத கணவர், உணவை சாப்பிட்டு உடல்நலக்குறைவை எதிர்கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: 9 மாத கைக்குழந்தையை கொலை செய்த தாய்; நெஞ்சை நடுங்கவைக்கும் காரணம்.!